Vishwanath and Sons Box Office : வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜு, ராதிகா சரத்குமார் நடிப்பில் ரிலீஸ் ஆகி உள்ள விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரத்தை பார்ப்போம்.
நடிகர் சூர்யா நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கிய 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படம் தியேட்டர்களில் வெளியாகி பட்டையைக் கிளப்பி வருகிறது. படம் ரிலீஸான முதல் நாளில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடித்துள்ளார். சூர்யா மற்றும் மமிதா பைஜுவின் நடிப்புதான் இந்தப் படத்தின் மிகப்பெரிய ப்ளஸ் பாயிண்ட்டாக பார்க்கப்படுகிறது. பாக்ஸ் ஆபிஸிலும் இந்தப் படம் நல்ல வசூலை ஈட்டி வருகிறது. வெளியான இரண்டே நாட்களில் உலகளவில் 100 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. 'கருப்பு' படத்திற்குப் பிறகு சூர்யாவுக்கு இது ஒரு தொடர் வெற்றியாக அமைந்துள்ளது.
டிக்கெட் விற்பனையிலும் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படம் புதிய சாதனையை படைத்துள்ளது. 'புக் மை ஷோ' தளத்தில் மட்டும், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று 3,11,000 டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளன. படத்தின் ஓடிடி உரிமம் ஏற்கெனவே விற்கப்பட்டுவிட்டது. நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் இந்த உரிமத்தைக் கைப்பற்றியுள்ளது. தியேட்டர் ரிலீஸுக்குப் பிறகு இந்தப் படம் ஓடிடி-யில் வெளியாகும். இயக்குநர் வெங்கி அட்லூரியே இந்தப் படத்திற்கு கதை எழுதியுள்ளார். ரவீனா டாண்டன், ராதிகா சரத்குமார், பவானி ஸ்ரீ ஆகியோர் மற்ற முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சூர்யாவின் 46-வது படமாக உருவாகியுள்ள 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்', பிளாக்பஸ்டர் ஹிட்டான 'லக்கி பாஸ்கர்' படத்திற்குப் பிறகு வெங்கி அட்லூரி இயக்கியுள்ள படமாகும்.
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் திங்கட்கிழமை மட்டும் உலகளவில் ரூ.9.50 கோடி வசூலித்துள்ளதாக சாக்னில்க் தளத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. அதில் இந்தியாவில் மட்டும் ரூ.7.50 கோடி வசூலித்த இப்படம் ஓவர்சீஸில் ரூ.2 கோடி வசூலை வாரிக்குவித்து உள்ளது. இப்படம் நேற்று அதிகபட்சமாக தெலுங்கு மாநிலங்களில் ரூ.3.85 கோடி வசூலித்து இருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் ரூ.3.65 கோடி வசூல் செய்துள்ளது. ஆனால் காட்சிகளை பொறுத்தவரை தெலுங்கில் 1924 காட்சிகளும், தமிழில் 3038 காட்சிகளும் திரையிடப்பட்டு இருக்கின்றன.
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் இதுவரை உலகளவில் ரூ.120.88 கோடி வசூலை வாரிக்குவித்து உள்ளது. போகிற போக்கை பார்த்தால் இப்படம் தெலுங்கு மாநிலங்களில் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் ஆடியன்ஸைக் காட்டிலும் தெலுங்கு ஆடியன்ஸை தான் இப்படம் வெகுவாக கவர்ந்துள்ளது. சூர்யாவிடம் இருந்து நீண்ட நாட்களுக்கு பின்னர் ஒரு ஃபீல் குட் ஃபேமிலி எண்டர்டெயினராக விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் வந்துள்ளது. இப்படம் சூர்யாவின் முந்தைய படமான கருப்பு சாதனையை முறியடிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.