முதல் முறையாக குழந்தையின் புகைப்படத்தை பகிர்ந்த ஆலியா பட்... வைரலாக்கும் ரசிகர்கள்..!

First Published | Feb 18, 2023, 5:00 PM IST

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையான ஆலியா பட் முதல் முறையாக தன்னுடைய மகளின் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட அதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.
 

பாலிவுட் திரையுலகின் நட்சத்திர காதல் ஜோடியான ரன்பீர் கபூர் - அலியா பட் ஜோடி, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், மிகப்பிரமாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். திருமணமான ஒரே மாதத்தில் கர்ப்பமாக இருக்கும் தகவலை ஆலியா பட் பகிர்ந்த நிலையில், திருமணத்திற்கு முன்பே அவர் கர்ப்பமாக இருந்ததாக சில விமர்சனங்களும் எழுந்தது.
 

இதை தொடர்ந்து, இந்த நட்சத்திர ஜோடிகளுக்கு... கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அழகிய பெண் குழந்தை பிறந்த நிலையில், அவருக்கு ராஹா என பெயர் வைத்தனர். தற்போது ஆலியா பட் திரையுலகில் இருந்து விலகி தன்னுடைய குழந்தையை கவனித்து கொண்டு தாய்மை என்னும் சுகத்தை அனுபவித்து வருகிறார்.

திருச்சந்தூரில் சாமி தரிசனம் செய்த நடிகர் சிவகார்திகேயன்... ரசிகர்களுக்குள் தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு!

Tap to resize

மேலும் ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூரின் குழந்தையின் புகைப்படத்தை ரசிகர்கள் பார்க்க ஆர்வமாக இருந்த போதும், இரண்டு வருடங்கள் வரை தங்களின் குழந்தை புகைப்படத்தை வெளியிட கூடாது என முடிவு செய்துள்ளதாக நெருங்கிய வட்டாரத்தில் இவர்கள் கூறி வந்ததாக தகவல் வெளியானது.
 

இந்நிலையில் ஆலியா தனது இன்ஸ்டாகிராமில் ஒரு குழந்தையின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். Ed-a-Mamma என குழந்தை அணியும் ஆடைகளை விளம்பரப்படுத்திய அவர், வெளியிட்டுள்ள குழந்தையின் புகைப்படம் ஆலியாவின் குழந்தை தான் என ரசிகர்கள் கூறி வருவதோடு, இந்த புகைப்படத்தையும் வைரலாக்கி வருகிறார்கள். 

'வாரிசு' படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடித்த ஜெயசுதாவுக்கு மட்டும் இத்தனை லட்சம் சம்பளமா?
 

ஆனால் இது ஆலியாவின் குழந்தை தான் என இதுவரை அவரின் தரப்பில் இருந்து எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் வெளியாக வில்லை. ரசிகர்களின் இந்த கேள்விக்கு ஆலியா வாய் திறப்பாரா? என்பதையும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
 

ஆலியா பட் தற்போது எந்த படங்களிலும் நடிக்கவில்லை என்றாலும், இவர் நடித்து முடித்துள்ள இரண்டு படங்கள் ரிலீசுக்கு தயாராகி உள்ளன. ஹார்ட் ஆஃப் ஸ்டோன் என்ற ஆங்கிலப் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில்,  ரன்வீர் சிங்கின் ராக்கி ஆர் ராணியின் பிரேம் கஹானி என்ற படம் ஜூலை மாதம் ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

பாக்ஸ் ஆபிசில் பட்டையை கிளப்பும் தனுஷின் 'வாத்தி'..! முதல் நாள் வசூலே இத்தனை கோடியா?

Latest Videos

click me!