பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில், விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் 'வாரிசு'. பொங்கல் விருந்தாக வெளியான இந்த திரைப்படம், ஃபேமிலி ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற பெற்றது. அதே போல் ஜெயசுதா மற்றும் விஜய்யின் செண்டிமெண்ட் காட்சிகள் ரசிகர்கள் மனதை வருடியது. அந்த அளவிற்கு அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் ஜெயசுதா.
மேலும் விஜயின் திரைப்படங்களில் அதிக வசூல் சாதனை நிகழ்த்திய திரைப்படமாக இருந்த 'பிகில்' படத்தின் வசூலை, இப்படம் முறியடித்து விட்டதாகவும் ரசிகர்கள் கொண்டாடினர். 'வாரிசு' படத்திற்கு போட்டியாக வெளியான 'துணிவு' திரைப்படமும் கிட்டத்தட்ட 300 கோடி வசூலை எட்டியது குறிப்பிடத்தக்கது.
ஆனால் 'வாரிசு' படத்தில் விஜய்யின் அம்மா வேடத்தில் நடித்த நடிகை ஜெயசுதாவிற்கு சுமார் 30 லட்சம் சம்பளம் கொடுத்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் திரையுலகை சேர்ந்தவர்களையே ஆச்சர்யப்படுத்தியுள்ளது.