
வானொலியில் ஆர்.ஜே.வாக தன்னுடைய கேரியரை துவங்கி, தற்போது முன்னணி நடிகராகவும், இயக்குனராகவும் மாறி உள்ள ஆர்.ஜே பாலாஜி ஹீரோவாக நடிக்கும் திரைப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் பா ரஞ்சித் வெளியிட்டுள்ளார்.
ஆர்.ஜே.பாலாஜி சிவகார்த்திகேயன் நடிப்பில் 2013 ஆம் ஆண்டு வெளியான, 'எதிர்நீச்சல்' திரைப்படத்தில் கேமியோ ரோலில் அறிமுகமானார். பின்னர் தீயா வேலை செய்யணும் குமாரு, படத்தில் இவர் நடித்த காமெடி கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் அதிகம் கவனிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வாயை மூடி பேசவும், வடகறி, இது என்ன மாயம், எச்சன், நானும் ரவுடிதான், ஜில் ஜங் ஜக், போன்ற படங்களில் காமெடி ரோலில் நடித்தார்.
குறிப்பாக 'நானும் ரவுடிதான்' படத்தில் இவர் நடித்த தோஷி பாபா கதாபாத்திரத்திற்கு சிறந்த காமெடி நடிகருக்கான சைமா விருது மற்றும் IIFA உற்சவம் அவார்ட் ஆகியவை கிடைத்தன. காமெடி நடிகராக நடித்துக் கொண்டிருக்கும் போதே, இயக்குனர் கே ஆர் பிரபு இயக்கத்தில், எல்கேஜி திரைப்படத்தில் ஹீரோவாக நடித்தார். காமெடி கலந்த ஹீரோ கதாபாத்திரம் என்பதால், இந்த படம் ஆர்.ஜே பாலாஜிக்கு பொருத்தமான கதைக்களமாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்தனர். மேலும் அரசியல் நையாண்டியாக இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருந்தது.
பிஸியான அனிருத்.. கடுப்பில் கன்னா பின்னானு சம்பளத்தை ஏற்றிய ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் கீரவாணி?
அடுத்தடுத்து சில படங்களில் காமெடி வேடத்தில் தொடர்ந்து நடித்து வந்த ஆர்.ஜே.பாலாஜி, அதிரடியாக 'மூக்குத்தி அம்மன்' திரைப்படத்தை நடிகை நயன்தாராவை வைத்து இயக்க உள்ளதாக அறிவித்தார். இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து 'வீட்டில் விசேஷம்' என்கிற படத்தையும், இயக்கி ஹீரோவாக நடித்தார். மேலும் 'ரன் பேபி ரன்', 'சிங்கப்பூர் சலூன்' போன்ற படங்களில் நடித்து தனக்கென தமிழ் திரையுலக ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தை பிடித்த ஆர்.ஜே.பாலாஜி, அடுத்ததாக நடிகர் சூர்யாவின் 45 திரைப்படத்தை இயக்குகிறார். இது குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.
இதை தொடர்ந்து ஆர்.ஜே பாலாஜி, அறிமுக இயக்குனர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் ஹீரோவாக நடித்து வரும் 'சொர்க்கவாசல்' திரைப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த படத்தின் போஸ்டரை இயக்குனர் பா ரஞ்சித் வெளியிட்டுள்ளார். படிக்கட்டுகளுக்கு நடுவே சில கைதிகள் நிற்பது போலவும், மத்திய சிறைச்சாலை மெட்ராஸ் #002575 - 1999 என்கிற என்று எழுதப்பட்ட சிலேட் ஒன்றை கையில் பிடித்தபடி ஆர்.ஜே பாலாஜி நிற்கிறார். இந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தலைவரின் வேட்டையனை வாஷ் அவுட் செய்ய அக்டோபர் 25ஆம் தேதி வெளியாகும் 7 புதிய படங்கள்!
சொர்க்கவாசல் என்கிற பெயரில், ஏற்கனவே 1954-ஆம் ஆண்டு... கே ஆர் ராமசாமி, எஸ் எஸ் ராஜேந்திரன், அஞ்சலிதேவி, பத்மினி, பி எஸ் வீரப்பா, இயக்குனர் சகாதேவன், உள்ளிட்ட ஏராளமான பழம்பெரும் நடிகர்கள் நடிப்பில், அண்ணாதுரை எழுத்தில், ஏ காசிலிங்கம் இயக்கத்தில், வெளியான மெகா ஹிட் திரைப்படமாகும். இப்படம் வெளியாகி சுமார் 70 ஆண்டுகள் ஆகும் நிலையில், இதே டைட்டிலில் ஆர்.ஜே பாலாஜியின் நடிப்பில் மீண்டும் புதிய படம் உருவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.