கைநிறைய படங்களுடன் படு பிஸியான இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கும் அனிருத் தான் இசையமைக்கும் படங்களுக்கு, 6 கோடி முதலில் வாங்கி வந்த நிலையில், அதை 8 கோடியாக உயர்த்திவிட்டதாக கூறப்படும் நிலையில், திடீர் என ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் கீரவாணி தங்களின் சம்பளத்தை அதிரடியாக உயர்ந்த ராக்ஸ்டாரும் தான் காரணம் என ஒரு தகவல் தீயாக பரவி வருகிறது.
தெலுங்கு மீடியாக்களில் சமீபத்திய தகவலின் படி, பாகுபலி, ஆர் ஆர் ஆர், ஆகிய படங்களின் இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி தன்னுடைய அடுத்தடுத்த படங்களுக்கு இசையமைக்க ஒரு திட்டத்திற்கு ரூ. 10 முதல் 12 கோடி வரை சம்பளம் கேட்பதாக கூறப்படுகிறது. அனிருத்தின் சம்பள உயர்வு தான் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் எம்.எம். கீரவாணி போன்ற முக்கிய இசையமைப்பாளர்களின் சம்பள உயர்வுக்கு காரணம் என DNA இந்தியா தகவலும் தெரிவிக்கிறது.