பணமோசடி வழக்கில் தமன்னாவிடம் 8 மணி நேரம் விசாரணை – கைது செய்யப்படுவாரா? என்ன காரணம்?

First Published | Oct 19, 2024, 12:54 PM IST

Tamannaah Bhatia Money Laundering Case: பணமோசடி வழக்கு தொடர்பாக நடிகை தமன்னாவிடம் அமலாக்கத் துறை கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டுள்ளது. கிட்டத்தட்ட 8 மணி நேரம் நடத்தப்பட்ட விசாரணைக்கு பிறகு தமன்னா கைது செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Tamannaah Bhatia Money Laundering Case: பணமோசடி உள்ளிட்ட நிதி மோசடி வழக்குகள் குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் அமலாக்கத்துறை சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கை விசாரித்து வருகிறது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னடம் என்று பல மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் தமன்னா. ஜெயிலர் படத்தில் வரும் காவாலா பாடலுக்கு குத்தாட்டம் போட்டார். இந்தப் பாடல் பட்டிதொட்டியெங்கும் பரவியது.

தமிழில் போதுமான வரவேற்பு இல்லாத நிலையில் மற்ற மொழி படங்களில் பிஸியான நடிகையாக இருக்கிறார். அடிக்கடி தனியார் விளம்பர நிகழ்ச்சியிலும் நடிப்பது உண்டு.

Tap to resize

இந்த நிலையில் பிட்காயின் மற்றும் கிரிப்டோ கரன்சி சம்பந்தமான மோசடியில் ஈடுபட்டு, பொதுமக்களிடம் பல கோடி ரூபாய் அளவிலான பணத்தை கொள்ளை அடித்த ஆன்லைன் நிறுவனம் ஒன்றின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அந்த நிறுவனம் நடத்திய ஒரு நிகழ்ச்சியில் தமன்னா பங்கேற்று பணம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக அமலாக்கத்துறை தமன்னாவிற்கு நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பியிருக்கிறது. நேற்று பிற்பகலில் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான தமன்னாவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் கிட்டத்தட்ட 8 மணி நேரம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

எனினும் தமன்னாவிற்கு எதிராக எந்த குற்றச்சாட்டுகளும் இல்லாத நிலையில் அவர் கைது செய்யப்படுவதற்கு வாய்ப்பு இல்லை என்று சொல்லப்படுகிறது. மேலும், அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது தொடர்பாக மட்டுமே அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

Latest Videos

click me!