
தமிழில் 1983-ஆம் ஆண்டு வெளியான 'வெள்ளை மனசு' என்கிற படத்தின் மூலம், அறிமுகமான ரம்யா கிருஷ்ணன், ஒரு காலத்தில் ஐட்டம் டான்ஸ் உட்பட, தொடந்து கலக்கலான வேடங்களையும்... மிகவும் போல்டான கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடித்து வந்தவர். தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ள ரம்யா கிருஷ்ணன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கே சவால் விடும் வகையில் நடித்து, திரையரங்கை தெறிக்கவிட்டவர்.
ரம்யா கிருஷ்ணன் 'படையப்பா' படத்தில் நடித்த நீலாம்பரி வேடத்திற்கு முன்பு பரிசீலனை செய்யப்பட்டவர் மீனா தான். ஆனால் அவரது சாந்தமான முகம் இந்த கதாபாத்திரத்திற்கு செட் ஆகாமல் போன நிலையில், இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் ரம்யா கிருஷ்ணனை தேர்வு செய்தார். மேலும் ரஜினிகாந்துக்கு இணையான நடிப்பை, நீலாம்பரி வேடத்தில் வெளிப்படுத்தினார் நடிகை ரம்யா கிருஷ்ணன். விமர்சன ரீதியாக இப்படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.
இயக்குனர் வம்சியை திருமணம் செய்து கொண்ட பின்னர், திரைப்பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காத நிலையில், சீரியல் பக்கம் திரும்பினார் ரம்யா கிருஷ்ணா. அதே போல், தெலுங்கு மற்றும் தமிழில் வெயிட்டான வேடங்களில் நடிக்க கார்த்திருந்த இவருக்கு, இரண்டாவது இன்னிங்ஸாக அமைந்தது பாகுபலி திரைப்படம். ராஜ மாதா சிவகாமியாக இவர் ஏற்று நடித்த கதாபாத்திரம், திரையுலகில் இவருக்கான அந்தஸ்தை கூட்டியது.
ரம்யா கிருஷ்ணாவை விட இந்த காதாபாத்திரத்தில் யாரையும் கற்பனை கூட செய்ய முடியாது என ரசிகர்கள் கூறும் அளவுக்கு, இவரின் கதாபாத்திரத்தின் தாக்கம் இருந்தது. தமிழ் - தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் இப்போதும் வலுவான கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி வரும் ரம்யா கிருஷ்ணாவை ஒரு நடிகையாக நமக்கு தெரிந்திருந்தாலும், வீட்டில் ஒரு மனைவியாகவும், அம்மாவாகவும் எப்படி இருப்பார் என்பதை நாம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இந்நிலையில் ரம்யா கிருஷ்ணன் வீட்டில் எப்படி இருப்பார் என வம்சி கூறிய தகவல் தற்போது வைரலாகி வருகிறது.
Diwali OTT Release Movies: தீபாவளி விருந்தாக ஓடிடியில் ரிலீசாகும் 2 சூப்பர் ஹிட் படங்கள்?
நடிகை ரம்யா கிருஷ்ணனும், இயக்குனர் வம்சியும் காதலித்து திருமணம் செய்து கொண்டது அனைவருக்கும் தெரியும். நாகார்ஜுனா நடித்த `சந்திரலேகா` படப்பிடிப்பின் போது இருவரும் காதலிக்க துவங்கினர். பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் இவர்களின் திருமணம் நடந்தது. இவர்களுக்கு மகன் ஒருவரும் உள்ளார். ஆனால் சமீபத்தில் இவர்களின் திருமண வாழ்க்கையை குறித்து வதந்திகள் வெளியாகின. இருவரும் பிரிந்து வாழ்வதாகவும், எனவே விவாகரத்து செய்ய போவதாகவும் கூறப்பட்டது. ரம்யா கிருஷ்ணன் சென்னையிலும், கிருஷ்ண வம்சி ஹைதராபாத்திலும் வசிக்கிறார்கள் என்கிற தகவலும் தீயாக பரவிய நிலையில். இந்த வதந்திக்கு சேர்த்து முற்றுப்புள்ளி வைத்துள்ளார் வம்சி.
இதுகுறித்து வம்சி கூறுகையில்... "படப்பிடிப்புகளுக்காக தான் ஹைதராபாத்தில் இருப்பதாகவும், ரம்யா கிருஷ்ணன் சென்னையில் இருப்பதாகவும் கூறினார். தாங்கள் தனித்தனியாக இருப்பதால்தான் இந்த வதந்திகள் உருவாகியிருக்கலாம், இப்படி வதந்திகளைப் பரப்புவது சாடிசம் என்றும், இவற்றைப் பார்க்கும்போது சிரிப்பு வருவதாகவும், இதில் துளியும் உண்மை இல்லை என்றும் கூறினார் கிருஷ்ண வம்சி. தங்கள் மீதுள்ள அன்பினால்தான் இப்படி வதந்திகளை உருவாக்குகிறார்கள் என்றும், ஐயோ கிருஷ்ண வம்சியும், ரம்யா கிருஷ்ணனும் பிரிந்து வாழ்கிறார்களே என்று வருத்தப்பட்டு இப்படிச் செய்திருப்பார்கள் என்றும் தனக்கே உரிய பாணியில் கிண்டலடித்தார். இருவரும் சமீபத்தில் எந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளவில்லை என்றும், இதனாலும் இந்த வதந்திகள் பிறந்திருக்கலாம், தங்களின் தனிப்பட்ட நிகழ்ச்சிகள், குடும்ப நிகழ்ச்சிகளுக்கு ஒன்றாகச் சென்றுள்ளோம், ஆனால் அந்தப் புகைப்படங்களை வெளியிட விருப்பமில்லை என்றும் கூறியுள்ளார் கிருஷ்ண வம்சி. நாங்கள் யார் என்பது எங்களுக்குத் தெரியும் என்றும், வீட்டுக்குச் சென்றால் எங்கள் உலகம் வேறு என்றும் வம்சி தெரிவித்துள்ளார்.
இந்தச் சூழலில் ரம்யா கிருஷ்ணனைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை வம்சி வெளியிட்டார். வீட்டில். ரம்யா மிகவும் வேடிக்கையான நபர் என்றும், மனிதர்களை மிகவும் நேசிப்பவர், அக்கறையுடன் கவனித்துக் கொள்பவர் என்றும் கூறினார். வீட்டில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார் என்றும், அதே நேரத்தில் மிகவும் புத்திசாலி, எல்லா விஷயங்களிலும் மிகவும் சாதுர்யமாகவும், கூர்மையாகவும் இருப்பார் என்றும் கூறினார். தனது குடும்பத்தினரை ரம்யா கிருஷ்ணன் மிகவும் அக்கறையுடன் கவனித்துக் கொள்வதாகவும் கிருஷ்ண வம்சி தெரிவித்தார். இப்படி மனைவி ராஜ மாதாவை புகழ்ந்து தள்ளி இந்த விவாகரத்து வந்தந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
சமீபத்தில் நடந்த 'கட்கம்' படத்தின் மறு வெளியீட்டின் போது இந்தத் தகவல்களை இயக்குனர் வெளியிட்டார். கிருஷ்ண வம்சி இறுதியாக `ரங்கமார்த்தாண்டா` படத்தை இயக்கினார். பிரகாஷ் ராஜ், ரம்யா கிருஷ்ணன், பிரம்மானந்தம், அனசுயா, சிவாத்மிகா, ராகுல் சிப்லிகஞ்ச் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த இந்தப் படம் விமர்சன ரீதியாக பாராட்டுகளைப் பெற்றது. ஆனால் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை. ரம்யா கிருஷ்ணன் சமீபத்தில் `குண்டூர் காரம்`, `புருஷோத்தமன்` ஆகிய படங்களில் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில், ரம்யா கிருஷ்ணன் வீட்டில் நீலாம்பரியாக இல்லாமல், ராஜ மாதாவின் தன்மைகளோடு உள்ளார் என்பது மட்டும் தெரிகிறது.
எம்.ஜி.ஆர் சொன்ன வார்த்தை.. இனி உங்களுக்கு பாட்டே எழுத முடியாது; வாலியின் தரமான சம்பவம்!