Gauthami
தமிழ் சினிமா நடிகை கௌதமி கடந்த சில காலமாக தான் மோசடி செய்யப்பட்ட நிலம் குறித்து போராடி வருகிறார். தனது நிலத்தை விற்பதாகக் கூறி மோசடி செய்த வழக்கில் நியாயம் கிடைக்கும் வரை போராடுவேன் என்று நடிகை கௌதமி தெரிவித்தார். இந்த வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக நேற்று (வியாழக்கிழமை) நீதிமன்றத்தில் ஆஜரான அவர் நீதிபதி முன் விளக்கம் அளித்தார்.
Gauthami Land Case
அவரை மோசடி செய்த சினிமா நிதியாளர் அழகப்பனை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று கௌதமி தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். பின்னர் கௌதமி செய்தியாளர்களிடம் பேசுகையில், தனக்கு நியாயம் கிடைக்கும் வரை போராடுவேன் என்றும், இதை விட்டுவிட மாட்டேன் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இன்று தான் படம் ரிலீஸ் ஆச்சு! அதற்குள் போஸ் வெங்கட் குடும்பத்தையே சோகத்தில் ஆழ்த்திய மரணம்!
Gauthami Land Fraud case
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே நடிகை கௌதமிக்குச் சொந்தமான 150 ஏக்கர் நிலத்தை விற்பதாகக் கூறி காரைக்குடியைச் சேர்ந்த சினிமா நிதியாளர் அழகப்பன் ரூ.3.1 கோடி மோசடி செய்ததாகத் தெரிகிறது. அவரிடமிருந்து தனது பணத்தை மீட்டுத் தரக் கோரி கௌதமி ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி.-யிடம் புகார் அளித்தார்.