கடந்த 1997ம் ஆண்டு தமிழில் வெளியான "புத்தம் புது பூவே" என்கின்ற திரைப்படத்தின் மூலம் கடந்த 1997ம் ஆண்டு பாடல் ஆசிரியராக தமிழ் திரை உலகில் களமிறங்கியவர் சினேகன். கடந்த 2001ம் ஆண்டு பிரபல இயக்குனர் சேரன் இயக்கத்தில் வெளியான "பாண்டவர் பூமி" என்கின்ற திரைப்படம் தான் பாடல் ஆசிரியர் சினேகனுக்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது. அந்த திரைப்படத்தில் வெளியான "அவரவர் வாழ்க்கையில்", "அழகான தடுமாற்றம்", "சின்ன வயசுல", "தோழா தோழா கனவு தோழா" மாற்றும் "தாயே உன்னையே" ஆகிய ஐந்து பாடல்களையும் எழுதியது சினேகன் தான். இந்த பாடல்கள் இன்றளவும் மிகப்பெரிய ஹிட் பாடல்களாக உள்ளது.