Kamal vs vijay sethupathi
தமிழ் ரசிகர்கள் மத்தியில் கடந்த ஏழு ஆண்டுகளாக மிகப்பெரிய வரவேற்பை பெற்று டிஆர்பி ரேட்டிங்கில் எப்பொழுதும் டாப்பில் இருந்து வரும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இந்த வீட்டுக்குள் செல்லும் போட்டியாளர்கள் 100 நாட்களை கடந்து பயணிக்கும் நிலையில், இறுதியில் மக்கள் தேர்வு செய்பவர்களுக்கு பிக் பாஸ் வீட்டின் டைட்டில் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த ஏழு ஆண்டுகளாக வெகு விமர்சியாக நடந்து வந்த இந்த நிகழ்ச்சியை உலகநாயகன் தமிழ் ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில், இந்த எட்டாவது சீசனை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் எட்டாவது சீசனின் ஓப்பனிங் ஷோவிற்கான டிஆர்பி ரேட்டிங் குறித்த தகவல் அண்மையில் வெளியானது. அதன்படி துவக்க நாளில் சுமார் 5.72 என்கின்ற டிஆர்பி ரேட்டிங் பெற்றது பிக் பாஸ் 8 நிகழ்ச்சி.
விவாகரத்து பயத்தை காட்டி மனைவிக்கு நாகர்ஜுனா போட்ட ஒரே கண்டீஷன்! 30 வருடமாக கஷ்டப்பட்டு காப்பாற்றும் அமலா!
bigg boss 8
ஆனால் இதற்கு முன்னதாக உலகநாயகன் கமல்ஹாசன் ஏழு சீசன்களாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்திருக்கிறார். இந்த சூழலில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒப்பனிங் ஷோவில் அதிக டிஆர்பி ரேட்டிங் பெற்றது உலகநாயகன் கமல்ஹாசனா அல்லது மக்கள் விஜய் சேதுபதியா என்பது குறித்து இந்த பதிவில் காணலாம். பிக் பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரை அதனுடைய முதல் சீசன் வெளியான பொழுது அதனுடைய அறிமுக எபிசோடுக்கு சுமார் 7.4 டிஆர்பி ரேட்டிங் கிடைத்தது. அது மட்டுமல்லாமல் அதனுடைய பினாலே ரவுண்டு நடக்கும் பொழுது சுமார் 14.25 டிஆர்பி ரேட்டின் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
Kamal
அதேபோல பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனின் அறிமுக எபிசோட் சுமார் 9.72 டிஆர்பி ரேட்டிங் பெற்ற நிலையில், இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனின் அறிமுக எபிசோட் சுமார் 7.8 டிஆர்பி ரேட்டிங் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் தான் கடந்த 2020ம் ஆண்டு கொரோனா தொற்று நோய்க்கு மத்தியில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் ஒளிபரப்பானது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் வரலாற்றிலேயே முதல் முறையாக இதன் அறிமுகம் எபிசோடுக்கு சுமார் 11.61 டிஆர்பி ரேட்டிங் கிடைத்தது. மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் பெரிய அளவில் எடுபடாத நிலையில், ஆறாவது சீசனும் சற்று டல்லடித்தது. ஆறாவது சீசனை பொருத்தவரை 5.54 என்கின்ற மிக குறைவான TRP ரேட்டிங்கை இந்த நிகழ்ச்சி பெற்றிருந்தது.
bigg boss kamalhaasan
மேலும் தொடர்ச்சியாக வெளியான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் அறிமுக நாளில் 9.9 டிஆர்பி ரேட்டிங் பெற்ற நிலையில் அதனுடைய பினாலே ரவுண்டில் 8.6 டிஆர்பி ரேட்டிங் பெற்றது. இந்த சூழலில் தற்பொழுது விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனின் தொடக்க எபிசோட் 5.72 டிஆர்பி ரேட்டிங்கும், வார இறுதி நாள் நிகழ்ச்சிகளுக்கு 4.27 டிஆர்பி ரேட்டிங் மட்டுமே கிடைத்திருப்பதால். உலகநாயகன் கமல்ஹாசன் தான் இந்த போட்டியில் தற்போது வென்றிருக்கிறார் என்றே கூறலாம்.
ஆபத்தான ஸ்டண்ட் காட்சியில் கூட டூப் போடாமல் ரிஸ்க் எடுத்து மிரட்டிய 5 நடிகர்கள்!