Kamalhaasan
"அன்னக்கிளி" திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகி, தன்னுடைய அசாத்திய திறமையால் மிகச் சிறந்த இசையமைப்பாளராகவும், பாடல் ஆசிரியராகவும், பாடகராகவும் கடந்த 48 ஆண்டுகளாக வளம் வந்து கொண்டிருக்கும் ஒரு மெகா ஹிட் கலைஞன் தான் இளையராஜா. எம்.எஸ்.வி காலத்துக்கு பிறகு, தமிழ் சினிமாவை இந்திய அளவு என்பதை தாண்டி, உலக அரங்கில் தலை நிமிரச் செய்த வெகு சில இசையமைப்பாளர்களில் இளையராஜாவும் ஒருவர். இவருடைய பாடல்கள் காலம் கடந்து இன்றளவும் பெரிய அளவில் வரவேற்பு பெற்று வருகிறது.
விஷ்ணு; அப்பா தயாரிப்பில் இல்லாமல் விஜய் நடித்த முதல் படம் - அவர் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Kamal and ilayaraja
தமிழ் திரையுலக பொருத்தவரை எத்தனையோ மெகா ஹிட் நடிகர்களுக்கு இசையமைத்தவர் இளையராஜா என்றாலும், பிறரைக் காட்டிலும் உலகநாயகன் கமல்ஹாசனின் திரைப்படங்களுக்கு பல முத்தான பாடல்களை கொடுத்தவர் அவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல கமலஹாசனுக்கு தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு மொழியிலும் அவர் இசையமைத்திருக்கிறார். கடந்த 1983ம் ஆண்டு தமிழில்
"சலங்கை ஒலி" என்கின்ற திரைப்படம் வெளியானது.
அதே ஆண்டு ஹிந்தியில் மற்றும் தெலுங்கு மொழியிலும் இந்த திரைப்படம் வெளியானது. தெலுங்கு மொழியை பொறுத்தவரை "சாகரா சங்கமம்" என்கின்ற பெயரில் வெளியான அந்த திரைப்படத்திற்கு இசையமைத்ததும் இளையராஜா தான். இசைஞானியின் திரை வரலாற்றில் அவருக்கு முதல் முதலில் தேசிய விருது வாங்கிக் கொடுத்த திரைப்படமும் அது தான் என்பது குறிப்பிடத்தக்கது.
music director ilayaraja
அதன் பிறகு 1985, 1988, 2009 மற்றும் 2015 ஆகிய ஆண்டுகளிலும் அவருக்கு தேசிய விருதுகள் கிடைத்திருக்கிறது. உலக நாயகன் கமல்ஹாசனின் "நாயகன்", "குணா", "சட்டம் என் கையில்", "சகலகலா வல்லவன்", "குரு", "நாயகன்", "மைக்கேல் மதன காமராஜன்" மற்றும் "ஹே ராம்" உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். அதிலும் குறிப்பாக கமலஹாசன் நடிப்பில் கடந்த 1989ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்ற திரைப்படம் தான் "அபூர்வ சகோதரர்கள்".
இந்த திரைப்படத்தில் வெளியான அனைத்து பாடல்களும் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அந்த திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு குறிப்பிட்ட பாடல் குறித்தும் மற்றும் அந்த பாடல் உருவான விதம் குறித்தும் சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு விழாவில் பேசியிருக்கிறார் இசைஞானி இளையராஜா.
Actor Kamal
அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கு, முதலில் இளையராஜா அமைத்த டியூன் நன்றாக இருந்தும், தனக்கு எம்ஜிஆர் படத்தில் வரும் "நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியை தான் நல்ல அழகி என்பேன்" என்கின்ற பாடலின் சாயலில் ஒரு பாடல் வேண்டும் என்று கமல் கேட்டுள்ளார். அப்படி அவர் கேட்ட நிலையில் கமலுக்காக நான் ஒரு ஏமாற்று வேலை ஒன்று செய்தேன். அப்படி செய்து உருவான பாடல் தான் "புது மாப்பிள்ளைக்கு ரப்பப்பரே" என்கின்ற பாடல். அதனுடைய இசை நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத் தான் என்கின்ற பாடலை தழுவி தான் இருக்கும் என்று கூறியிருக்கிறார் இளையராஜா.
ஆபத்தான ஸ்டண்ட் காட்சியில் கூட டூப் போடாமல் ரிஸ்க் எடுத்து மிரட்டிய 5 நடிகர்கள்!