1992 ஆம் ஆண்டு "நாளைய தீர்ப்பு" திரைப்படம் வெளியானது, தொடர்ச்சியாக "செந்தூரப்பாண்டி", "ரசிகன்", "தேவா" மற்றும் "ராஜாவின் பார்வையிலே" உள்ளிட்ட திரைப்படங்களை தன்னுடைய தந்தை எஸ்.ஏ சந்திரசேகரின் இயக்கத்திலும், அவருடைய உறவினர் விமல் என்பவருடைய தயாரிப்பிலும் நடித்து வந்த தளபதி விஜய், முதல் முறையாக 1995ம் ஆண்டு வெளியான "விஷ்ணு" என்கின்ற திரைப்படத்தில் தான் வேறொரு தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்ற தொடங்கினார்.
இந்த திரைப்படத்தையும் இயக்கியது எஸ்ஏ சந்திரசேகர் தான் என்றாலும், எம். பாஸ்கர் மற்றும் பாலாஜி பிரபு உள்ளிட்டவர்களுடைய தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரித்து வழங்கியது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட 1984ம் ஆண்டு முதல் கலை உலகில் தளபதி விஜய் பயணித்து வந்தாலும் 1995 ஆம் ஆண்டு வெளியான இந்த "விஷ்ணு" என்கின்ற திரைப்படம் தான் முதல் முறையாக, தன்னுடைய தந்தையின் தயாரிப்பு அல்லாமல் வேறொருவர் தயாரிப்பில் விஜய் நடித்த முதல் திரைப்படம் ஆகும்.