தற்போது இவர்களுக்கு அகில் என்கிற மகன் இருந்தாலும், நாகார்ஜுனாவின் முதல் மனைவி மகனான நாக சைதன்யாவையும் தன்னுடைய சொந்த மகன் போன்றே அமலா பார்த்து வருகிறார். திருமணத்திற்கு பின்னர் திரையுலகில் இருந்து விலகிய அமலா, தன்னுடைய கணவரின் தயாரிப்பு நிறுவனங்கள், அவருக்கு சொந்தமான ஷூட்டிங் ஸ்பாட் போன்ற இடங்களின் நிர்வாகத்தை கவனித்து வருகிறார்.
எம்.ஜி.ஆர் சொன்ன வார்த்தை.. இனி உங்களுக்கு பாட்டே எழுத முடியாது; வாலியின் தரமான சம்பவம்!
நாகார்ஜுனாவின் மகன்கள் இருவருமே தற்போது இளம் நடிகராக உள்ள நிலையில், தமிழ் ரசிகர்கள் மத்தியில்... நாக சைதன்யா தான் மிகவும் நன்கு அறியப்பட்டவர். இவர் கடந்த ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான கஸ்டடி என்கிற திரைப்படத்தில் நடித்திருந்தார். மேலும் நடிகை சமந்தாவை திருமணம் செய்து விவாகரத்து பெற்ற சைதன்யா, கூடிய விரைவில் பொன்னியின் செல்வன் பட நடிகை சோபிதா துலிபாலாவை திருமணம் செய்து கொள்ள உள்ளார்.