Bose Venkat Debut in Metti Oli Serial
கடந்த 2002 ஆம் ஆண்டு, சன் டிவியில் ஒளிபரப்பான 'மெட்டி ஒலி' சீரியலில் முக்கிய வேடத்தில், போஸ் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் போஸ் வெங்கட்.
சீரியல் மூலம் தன்னுடைய நடிப்பு கேரியரை துவங்கிய போஸ் வெங்கட், இதைத்தொடர்ந்து நடிகை மீனா நடிப்பில் சன் டிவியில் ஒளிபரப்பான லட்சுமி, ராதிகா நடிப்பில் ஒளிபரப்பான செல்வி, போன்ற சில சீரியல்களில் அடுத்தடுத்து நடித்தார்.
Bose Venkat Cinema Carrier
சீரியலில் நடித்துக் கொண்டே, தமிழ் சினிமாவிலும் நடிக்க வாய்ப்பு தேட துவங்கிய போஸ் வெங்கட்டுக்கு 'ஈரநிலம்' என்கிற திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதைத்தொடர்ந்து சிந்தாமல் சிந்தாமல், அரசாட்சி, கண்ணம்மா, ரைட்டா தப்பா, தலைநகரம், நாளை, தீபாவளி, ரசிகர் மன்றம், போன்ற சுமார் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். தமிழ் மட்டும் இன்றி மலையாளம், கன்னடம், தெலுங்கு, போன்ற மொழிகளிலும் நடித்துள்ள போஸ் வெங்கட், டப்பிங் ஆர்டிஸ்ட்டாகவும் அறியப்பட்டவர்.
விவாகரத்து பயத்தை காட்டி மனைவிக்கு நாகர்ஜுனா போட்ட ஒரே கண்டீஷன்! 30 வருடமாக கஷ்டப்பட்டு காப்பாற்றும் அமலா!
Director Bose Venkat
இவர் சைல்ட் ஆர்ட்டிஸ்ட் ஆக அறிமுகமாகி, பின்னர் சில திரைப்படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து பிரபலமான நடிகை சோனியாவை காதலித்து 2003 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். நடிகர் என்பதைத் தாண்டி, கடந்த 2020 ஆம் ஆண்டு கன்னிமாடம் என்கிற படத்தை இயக்கினார் போஸ் வெங்கட். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாக வெற்றி பெறாவிட்டாலும், விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து இவர் இயக்கியுள்ள 'சார்' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகி உள்ளது. இந்த படத்தை வெற்றிமாறன் வழங்கியுள்ளார்.
Bose Venkat Mother Death
'வாகை சூடவா' படத்திற்கு பின்னர், விமல் அழுத்தமான கதைக்களத்தில் நடித்துள்ள இந்த படம் கல்வியை முன்னிறுத்தி எடுக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும், இந்த படத்தின் சந்தோஷத்தை அனுபவிக்க முடியாத சோகத்தில் உள்ளார் இயக்குனர் போஸ் வெங்கட். இவரின் தாயார் ராஜாமணி 83. வயது மூப்பு காரணமாக உடல்நல பிரச்சனைகளை எதிர்கொண்டுவந்த இவர் இன்று மாலை 5 மணி அளவில், காலமானார். இவருடைய இறுதிச் சடங்குகள் சொந்த ஊரான அறந்தாங்கியில் நாளை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் போஸ் வெங்கட் தன்னுடைய சமூக வலைதளத்தில் மிஸ் யு அம்மா என கண்ணீர் இமோஜியுடன் தெரிவித்துள்ளார். ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் இருக்கு தொடர்ந்து ஆறுதல் கூறி வருகிறார்கள்.
ஆபத்தான ஸ்டண்ட் காட்சியில் கூட டூப் போடாமல் ரிஸ்க் எடுத்து மிரட்டிய 5 நடிகர்கள்!