தங்கலான்:
சியான் விக்ரம் மற்றும் இயக்குனர் பா.ரஞ்சித் கூட்டணியில் உருவாகி கடைசியாக வெளியான திரைப்படம் 'தங்கலன்'. ஆகஸ்ட் 15 அன்று திரையரங்குகளில் வெளியான இந்த படம், செப்டம்பர் 20 ஆம் தேதி OTT-யில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், சில காரணங்களால் ஓடிடி வெளியீட்டில் தாமதம் ஏற்பட்டது.
இருப்பினும், சமீபத்தில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, அளித்த பேட்டி ஒன்றில், தீபாவளிக்கு நெட்ஃபிக்ஸ் தளத்தில் இப்படம் வெளியாகும் என கூறியுள்ளார். இதுபற்றி அவர் மேலும் கூறியபோது, நெட்ஃபிக்ஸ் தீபாவளிக்கு 'தங்கலான்' படத்தின் வெளியீட்டை திட்டமிட்டனர். இது பெரிய படம் என்பதால் முன்னிட்டு திருவிழாவை வெளியிட வேண்டும் என்று விரும்பினர். இருப்பினும், தங்கலான் டிஜிட்டல் ரிலீஸில் சில யூடியூபர்கள் சிக்கல்கள் இருப்பதாகக் கூறுகின்றனர் அப்படி எந்த ஒரு பிரச்னையும் இல்லை என தெரிவித்துள்ளார்". இதன் மூலம் தங்கலான் தீபாவளிக்கு நெட்பிலிக்ஸ் தளத்தில் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மிகப்பிரமாண்ட பொருட்செலவில் உருவான இந்த படம் தங்கம் எடுக்கும் பழங்குடி மக்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிகை பார்வதி 4 குழந்தைகளின் அம்மாவாக நடித்திருந்தார். அதே போல், மாளவிகா மோகனன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.