ரெட்ரோ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி திடீரென மாற்றம் - அதிகாரப்பூர்வமாக அறிவித்த நெட்பிளிக்ஸ்

Published : May 26, 2025, 09:40 AM IST

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த ரெட்ரோ திரைப்படம் ஜூன் மாதம் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது திடீரென மாற்றப்பட்டு உள்ளது.

PREV
14
Retro Movie Official OTT Release Date

ஜிகர்தண்டா டபுள் எக்ஸுக்குப் பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய படம் ரெட்ரோ. ரொமாண்டிக் கேங்ஸ்டர் திரைப்படமான இதை கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் கிரியேஷன்ஸ் மற்றும் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. பூஜா ஹெக்டே நாயகியாக நடித்த இந்தப் படத்தில் ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், நாசர், பிரகாஷ் ராஜ், விது, கஜராஜ், சுவாசிகா, அவினாஷ் ரகுதேவன், ராகேஷ் ரக்கு, குமார் நடராஜன், கார்த்திகேயன் சந்தானம், தமிழ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர்.

24
சூர்யாவின் கம்பேக் படம் ரெட்ரோ

ரெட்ரோ படத்துக்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருந்தார். ஷஃபிக் முகமது அலி படத்தொகுப்பு செய்த இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். ரெட்ரோ படம் பெரும் எதிர்பார்ப்புடன் கடந்த மே 1ந் தேதி ரிலீஸ் ஆனது. கங்குவா தோல்விக்கு பின் சூர்யா நடித்த படம் இது என்பதால் இதன் மூலம் கம்பேக் கொடுப்பாரா என எதிர்பார்க்கப்பட்டது. அவர்கள் எதிர்பார்த்தபடியே வெற்றியை ருசித்துள்ளார் நடிகர் சூர்யா.

34
ரெட்ரோ வசூல் எவ்வளவு?

ரெட்ரோ திரைப்படம் ரூ.65 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டது. இப்படம் திரையரங்கில் ரூ.100 கோடி வசூலித்திருந்தது. இதுதவிர ஆடியோ, டிஜிட்டல், சாட்டிலைட் ஆகிய உரிமைகளை விற்பனை செய்ததன் மூலம் ரூ.135 கோடி வசூல் ஈட்டி இருந்தது. இதன் மூலம் ஒட்டுமொத்தமாக ரெட்ரோ திரைப்படம் 235 கோடி வசூலித்து இருந்ததாக படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. மேலும் இப்படத்தின் லாபத்தில் இருந்து 10 கோடியை அகரம் பவுண்டேஷனுக்கு வழங்கி இருந்தார் சூர்யா.

44
ரெட்ரோ ஓடிடி ரிலீஸ்

இந்நிலையில், ரெட்ரோ திரைப்படம் 25 நாட்களை நிறைவு செய்துள்ள நிலையில், அதன் ஓடிடி ரிலீஸ் தேதியையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளனர். எதிர்பார்த்ததற்கு முன்னதாகவே ரெட்ரோ படம் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படம் ஜூன் 5ந் தேதி ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது திடீர் ட்விஸ்ட் ஆக ஒரு வாரம் முன்னதாகவே அப்படம் ஓடிடிக்கு வருகிறது. அதன்படி வருகிற மே 31ந் தேதி முதல் ரெட்ரோ திரைப்படம் ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆகும் என நெட்பிளிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories