ரசிகர் கொடுத்த அட்வைஸ்; ஆளே டோட்டலாக மாறிய சூர்யா!

Published : Feb 03, 2025, 03:41 PM IST

நடிகர் சூர்யா சிங்கப்பூரை சேர்ந்த ரசிகர் ஒருவர் கொடுத்த அட்வைஸ் குறித்தும், அதனால் தன்னையே மாற்றி கொண்டதாகவும் கூறியுள்ள தகவல் வைரலாகி வருகிறது.  

PREV
17
ரசிகர் கொடுத்த அட்வைஸ்; ஆளே டோட்டலாக மாறிய சூர்யா!
சூர்யா ரசிகர்கள்:

வாரிசு நடிகராக தமிழ் திரையுலகில் அறிமுகமாகி, தனக்கென தனி அடையாளத்தை ரசிகர்கள் மத்தியில் உருவாக்கிக் கொண்டவர் நடிகர் சூர்யா. இவருக்கு இந்திய அளவில் மட்டுமின்றி, உலக அளவிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். நடிப்பு மீது இருந்த ஆர்வத்தால் லயோலா கல்லூரியில் விஸ்காம் படிப்பை தேர்வு செய்து படித்த, சூர்யா பின்னர் சில வருடங்கள் கார்மெண்ட் பிஸினஸில் கவனம் செலுத்த துவங்கினார். 
 

27
ஆசை பட வாய்ப்பை நிராகரித்த சூர்யா:

சூர்யா கார்மெண்ட் நிறுவனத்தில் பணியாற்றிய போது, இயக்குனர் வசந்த் தன்னுடைய ஆசை படத்தில் சூர்யாவை நடிக்க வைக்க அணுகியுள்ளார். அப்போது அந்த வாய்ப்பை, சூர்யா நிராகரித்த நிலையில்... இந்த படம் அஜித்துக்கு சென்றது. இதை தொடர்ந்து தானாக இயக்குனர் வசத்தை தேடி சென்று, பட வாய்ப்பு கேட்டார். அந்த சமயத்தில் தான் நேருக்கு நேர் படத்தில் நடிக்க இருந்த அஜித், சில காரணங்களால் இந்த படத்தில் இருந்து விலக, சூர்யாவுக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது.

'லப்பர் பந்து' வெற்றிக்கு பின் 7 மடங்கு சம்பளத்தை உயர்த்திய அட்டகத்தி தினேஷ்; அதிர்ச்சியில் தயாரிப்பாளர்கள்!

37
பாலா இயக்கத்தில் நந்தா :

ஆரம்பத்தில் சாக்லேட் ஹீரோவாக சூர்யா நடித்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் இவரை பிரபலப்படுத்தி இருந்தாலும், எந்த படமும் வசூல் ரீதியாக வெற்றியை கொடுக்கவில்லை. அந்த சமயத்தில் சூர்யா இயக்குனர் பாலா இயக்கத்தில் நடித்த, நந்தா திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது. இதனை சமீபத்தில் கூட, பாலா 25 நிகழ்ச்சியில் சூர்யா வெளிப்படையாகவே கூறினார். 'நந்தா' பட வாய்ப்பு தான் தனக்கு 'வாரணம் ஆயிரம்' மற்றும் 'காக்க காக்க' போன்ற படங்கள் வருவதற்கு காரணமாக அமைந்ததாகவும் தெரிவித்தார்.

47
அதிர்ச்சி தோல்வியை தழுவிய கங்குவா:

இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா தயாரித்து - நடித்து வந்த வணங்கான் படத்தில் இருந்து, பாதியிலேயே சூர்யா விலகிய நிலையில்....  இதைத்தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான கங்குவா படத்தில் தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்தினார். சுமார் 400 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்ட காட்சிகளுடன் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், 2000 கோடி வசூலை அள்ளும் என படக்குழுவினர் எதிர்பார்த்தனர். ஆனால் போட்ட பணத்தில் பாதியைக் கூட வசூல் செய்யாதது மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்தது.

நடிகை பார்வதி நாயருக்கு கோலாகலமாக நடந்த நிச்சயதார்த்தம்; மாப்பிள்ளை யார் தெரியுமா?

57
சூர்யாவின் ரெட்ரோ ரிலீஸ்

இந்த படத்தின் தோல்வியால் பல்வேறு கோவில்களுக்கு சென்று ஆறுதல் தேடி வந்த நடிகர் சூர்யா... தற்போது மீண்டும் தன்னுடைய திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.  அந்த வகையில் தற்போது இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இவர் நடித்து முடித்துள்ள 'ரெட்ரோ' திரைப்படம் மே 1-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. அதேபோல் தற்போது சூர்யாவின் கைவசம் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடித்து வரும், 45 ஆவது திரைப்படம் உள்ளது. இதைத்தொடர்ந்து, வெற்றிமாறன் இயக்கத்தில் 'வாடிவாசல்' திரைப்படத்தில் சூர்யா இணைய உள்ளார்.
 

67
மலையாள பட இயக்குனரின் இயக்கத்தில் சூர்யா:

மேலும் சூர்யா மலையாள பட இயக்குனர் Amal Neerad இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. கூடிய விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில்,  தன்னுடைய சினிமா கேரியரில் மிகவும் பிஸியாக இருக்கும் நடிகர் சூர்யா, அவ்வப்போது தன்னைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் ரசிகர் கொடுத்த அட்வைஸ் தான் தன்னுடைய தோற்றத்தின் மாற்றத்திற்கு காரணம் என கூறியுள்ளார்.

விஷாலின் 'மத கஜ ராஜா' தெலுங்கில் மோசமான தோல்வி!
 

77
ரசிகர் கூறிய அறிவுரையை ஏற்றுக்கொண்ட சூர்யா:

அதாவது சூர்யா பொதுவாகவே தன்னுடைய பேன்ட்டை இடுப்புக்கு மேல் தான் போட்டிருப்பாராம். சிங்கப்பூரில் இருந்து தன்னை சந்திக்க வந்த ரசிகர் ஒருவர், பேண்டை நீங்கள் லோ ஹிப்பில் போட்டால் நன்றாக இருக்கும் என கூறியதை தொடர்ந்து, நான் அதை ஃபாலோ செய்து வருகிறேன். இப்படி எனக்கு சிங்கப்பூர் ரசிகர்களிடம் இருந்து பல அட்வைஸ் கிடைத்துள்ளதாக சூர்யா தெரிவித்துள்ளார். இந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது.
 

click me!

Recommended Stories