டான் பட இயக்குனருக்கு விபூதி அடித்த சிவகார்த்திகேயன்; SK 24 இயக்குனர் அதிரடியாக மாற்றம்?

Published : Feb 03, 2025, 02:45 PM IST

சிவகார்த்திகேயனின் 24வது படத்தை டான் பட இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்குவதாக இருந்த நிலையில், தற்போது அப்படம் கைமாறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

PREV
14
டான் பட இயக்குனருக்கு விபூதி அடித்த சிவகார்த்திகேயன்; SK 24 இயக்குனர் அதிரடியாக மாற்றம்?
சிவகார்த்திகேயன் ரொம்ப பிஸி

தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். அமரன் படத்தின் வெற்றிக்கு பின்னர் அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அந்த வகையில் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் எஸ்.கே.23 திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மிணி வஸந்த் நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளன.

24
டான் கூட்டணி உடைகிறது

இதுதவிர சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது மற்றொரு திரைப்படம் உருவாகி வருகிறது. அப்படத்தின் பெயர் பராசக்தி. இப்படத்தி சுதா கொங்கரா இயக்கி வருகிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக ஜெயம் ரவி நடிக்கிறார். மேலும் ஸ்ரீலீலா, அதர்வா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கிறார். இது சிவகார்த்திகேயனின் 25வது படமாகும்.

இதையும் படியுங்கள்... அஜித்தின் விடாமுயற்சி பட சாதனையை சல்லி சல்லியாய் நொறுக்கிய SKவின் பராசக்தி!

34
சிபி சக்ரவர்த்தி நீக்கம்

மேலும் சிவகார்த்திகேயனின் 24வது படத்தை சிபி சக்ரவர்த்தி இயக்குவதாக இருந்தது. இவர்கள் இருவரும் முன்னதாக இணைந்து பணியாற்றிய டான் படம் மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்றதால், அந்த கூட்டணி எஸ்.கே.24 படத்திற்காக மீண்டும் இணைய திட்டமிட்டு இருந்தது. இப்படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்பட்டு வந்தது. ஆனால் தற்போது அப்படத்தில் இருந்து இயக்குனர் சிபி சக்ரவர்த்தி நீக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

44
எஸ்.கே.24 படத்தை இயக்கும் அஹ்மத்

சிவகார்த்திகேயன் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சிபி சக்ரவர்த்தி நீக்கப்பட்டு, அவருக்கு பதில் இயக்குனர் அஹ்மத் இப்படத்தை இயக்க கமிட்டாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் ஏற்கனவே என்றென்றும் புன்னகை, மனிதன்  போன்ற படங்களை இயக்கியவர் ஆவார். அவர் சொன்ன கதை சிவகார்த்திகேயனுக்கு பிடித்துப் போனதால் அவர் எஸ்.கே.24 படத்தை இயக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இதையும் படியுங்கள்... பராசக்தி தலைப்பு யாருக்கும் கிடையாது; தயாரிப்பு நிறுவனத்தின் அறிவிப்பால் வந்த புது சிக்கல்!

Read more Photos on
click me!

Recommended Stories