Vishal Love Relationship Rumours With Abhinaya : நடிகர் விஷால் மார்க் ஆண்டனி படத்தில் தனது மனைவியாக நடித்த நடிகை அபிநயாவை காதலிப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
Vishal Love Relationship Rumours With Abhinaya : விஷால் நடிப்பில் வெளியான எந்தப் படமும் ஹிட் கொடுக்காத நிலையில் மார்க் ஆண்டனி படம் விஷாலுக்கு திருப்பு முனையை ஏற்படுத்தியது. இந்தப் படத்திற்கு பிறகு வந்த ரத்னம் சொல்லிக் கொள்ளுபடி இல்லை. இந்த நிலையில் தான் 12 ஆண்டுகளுக்கு பிறகு திரைக்கு வந்த சுந்தர் சியின் மத கஜ ராஜா படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது. இப்போது எங்கு பார்த்தாலும் விஷாலைப் பற்றிய பேச்சு தான் அடிபடுகிறது. அந்தளவிற்கு மத கஜ ராஜா படம் ஹிட் கொடுத்துவிட்டது. இதன் காரணமாக கிடப்பில் போடப்பட்ட எல்லா தமிழ் படங்களும் இப்போது திரைக்கு வருவதற்கு தயாராகி வருகின்றன.
24
விஷால் காதல் வதந்தி
இந்த நிலையில் தான தற்போது 47 வயதாகும் விஷால் இதுவரையில் திருமணமே செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார். ஆனால், கடந்த 2019 ஆம் ஆண்டு விஷாலுக்கும் அனிஷா அல்லா ரெட்டிக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அதன் பிறகு 6 மாதங்கள் கழித்து அவர்களது திருமணம் ரத்தானது. இதைத் தொடர்ந்து விஷால் பல நடிகைகளுடன் இணைந்து கிசுகிசுக்கப்பட்டார். இப்போது விஷாலும் நடிகை அபிநயாவும் காதலிப்பதாக தகவல் வெளியானது. அதுவும் கடந்த 5 ஆண்டுகளாக இருவரும் டேட்டிங்கில் இருப்பதாக கூறப்பட்டது. இதற்கு முக்கிய காரணம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் இரட்டை வேடங்களில் நடித்து வெளியான டைம் டிராவல் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.
34
அபிநயா 15 வருட காதல் கதை
இந்தப் படத்தில் விஷாலுக்கு மனைவியாக அபிநயா நடித்திருந்தார். இதன் காரணமாக இருவரும் காதலித்து வருவதாகவும் கூறப்பட்டது. அதுமட்டுமின்றி இருவரும் காதலிப்பதால் தான் மார்க் ஆண்டனி படத்தில் அபிநயாவிற்கு வாய்ப்பும் கிடைத்ததாக சொல்லப்பட்டது. காதல் வதந்தி குறித்து நடிகை அபிநயா தெளிவான விளக்கம் கொடுத்துள்ளார். நாடோடிகள் படம் மூலமாக பிரபலமான நடிகை அபிநயாவிற்கு ஈசன், தனி ஒருவன், குற்றம் 23, நிசப்தம், குற்றம் புரிந்தால், விழித்திரு ஆகிய படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கடந்த ஆண்டு இயக்குநர் ஜோஜூ ஜார்ஜ் இயக்கி நடித்த பணி என்ற படம் வெளியாகி ஹிட் கொடுத்தது. இந்தப் படத்தில் ஜோஜூ ஜார்ஜிற்கு மனைவியாக அபிநயா நடித்திருந்தார்.
44
அபிநயா விஷால் காதல் வதந்தி
அவருடைய நடிப்பு ரசிகர்களால் கொண்டாடப்பட்டதோடு அழகும் ரசிக்கப்பட்டது. இந்த நிலையில் தான் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வெளியாகி வரும் காதல் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தனது காதல் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: கடந்த 15 ஆண்டுகாலமாக குழந்தைபருவ நண்பருடன் உறவில் இருப்பதாகவும், இருவரும் ஒருவரையொரு காதலித்து வருவதாக கூறிய அவர், இனிமேல் இது போன்று வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று கூறி விஷால் உடனான வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
ஆனால், 15 ஆண்டுகாலமாக உறவில் இருக்கும் அந்த காதலன்பற்றி அபிநயா எந்த பதிலும் அளிக்கவில்லை. அவர் நடிகரா இல்லை வேறொருவரா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்ப தொடங்கியிருக்கின்றனர். அபிநயா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.