விடாமுயற்சி படைக்க உள்ள வரலாற்று சாதனை; இதுவரை எந்த படமும் படைத்ததில்லை!

Published : Feb 03, 2025, 03:24 PM ISTUpdated : Feb 03, 2025, 03:25 PM IST

அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படம் தமிழ்நாட்டில் இதுவரை எந்த படமும் செய்திராத சாதனையை படைக்க உள்ளது.

PREV
14
விடாமுயற்சி படைக்க உள்ள வரலாற்று சாதனை; இதுவரை எந்த படமும் படைத்ததில்லை!
விடாமுயற்சி ரிலீசுக்கு ரெடி

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள படம் விடாமுயற்சி. இப்படத்தை லைகா நிறுவனம் சுமார் 200 கோடி பட்ஜெட்டில் தயாரித்துள்ளது. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷாவும் வில்லனாக ஆக்‌ஷன் கிங் அர்ஜுனும் நடித்துள்ளனர். மேலும் ரெஜினா, ஆரவ், யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார்.

24
விறுவிறு புக்கிங்

நடிகர் அஜித்தின் 62வது படமான இது இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கே ரிலீஸ் ஆவதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் சிக்கல் வந்ததால் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது. தற்போது பிப்ரவரி 6ந் தேதி விடாமுயற்சி திரைப்படம் திரைக்கு வர உள்ளது. அப்படத்திற்கான முன்பதிவும் கடந்த சில தினங்களுக்கு முன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் ரிலீஸ் ஆவதால் தமிழில் இதற்கு போட்டியாக எந்த படமும் ரிலீஸ் ஆகவில்லை.

இதையும் படியுங்கள்... விஜய்யை விட அஜித்துக்கு 100 கோடி கம்மி சம்பளம்; விடாமுயற்சி பட நடிகர்களின் சம்பள விவரம் இதோ

34
வரலாறு படைக்க உள்ள விடாமுயற்சி

ஆனால் தெலுங்கில் நாக சைதன்யா, சாய் பல்லவி நடிப்பில் உருவாகி இருக்கும் தண்டேல் திரைப்படத்தின் தமிழ் டப்பிங் மட்டும் வருகிற பிப்ரவரி 7ந் தேதி திரைக்கு வர உள்ளது. போட்டிக்கு எந்த படமும் ரிலீஸ் ஆகாததால், விடாமுயற்சி படத்தையே தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான திரையரங்குகளிலும் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். அதன்படி இப்படத்தின் தமிழக உரிமையை கைப்பற்றி உள்ள ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் இப்படத்தை தமிழகத்தில் மட்டும் 1000 திரைகளில் திரையிட உள்ளதாம்.

44
1000 திரைகளில் விடாமுயற்சி ரிலீஸ்

இதன்மூலம் புது சாதனை நிகழ்த்த உள்ளது விடாமுயற்சி திரைப்படம். இதற்கு முன்னர் அஜித் நடித்த வலிமை படம் தமிழ்நாட்டில் 950 திரைகளில் ரிலீஸ் ஆனதே சாதனையாக இருந்த நிலையில், அதை விடாமுயற்சி படம் முறியடிக்க உள்ளது. அதிக திரைகளில் ரிலீஸ் ஆன படங்களின் பட்டியலில் முதல் இரண்டு இடங்களை அஜித் படங்கள் ஆக்கிரமித்துள்ள நிலையில், மூன்றாவது இடத்தில் ரஜினியின ஜெயிலர் படம் (850 திரைகள்), நான்காவது இடத்தில் விஜய்யின் லியோ (800 திரைகள்) படமும் உள்ளது.

இதையும் படியுங்கள்... அஜித்தின் விடாமுயற்சி பட சாதனையை சல்லி சல்லியாய் நொறுக்கிய SKவின் பராசக்தி!

click me!

Recommended Stories