பல முன்னணி நடிகைகள் பொறாமை படும் அளவிற்கு, முதல் படத்திலேயே... தளபதி விஜய்க்கு ஹீரோயினாக மாறி... இளம் நடிகைகளை ஜெலஸ் ஆகியவர் மாளவிகா மோகனன். தளபதி நாயகி என்கிற அடையாளமே, இவரை தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக்கியது.
கடைசியாக மாளவிகா மோகனன் நடிப்பில் வெளியான 'மாறன்' திரைப்படம், படு தோல்வியை சந்தித்ததால்... தமிழில் கூடுதல் கவனத்துடன் கதை தேர்வு செய்து நடிக்க தயாராகி வருகிறார். அதே நேரம், பாலிவுட் பட வாய்ப்புகள் இவருக்கு குவிந்து வருகிறது.
கண்களாலேயே மயக்கும் மாளவிகா... இந்த புகைப்படங்களில் சற்று டல்லாக இருப்பது போல் தெரிவதால், இவரது ரசிகர்கள் ஏன் இந்த சோகம்? என்பது போன்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.