இதையடுத்து நடிகை ஜாக்குலினும் இந்த வழக்கின் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தி, சுகேஷிடம் இருந்து அவர் பெற்ற பரிசுகள் குறித்த விவரங்களை போலீசார் சேகரித்தனர். இதன்பின்னர் அவருக்கு சொந்தமான ரூ.7.27 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கிய அமலாக்கப்பிரிவு அதிகாரிகள், அவரையும் இந்த வழக்கில் குற்றவாளியாக சேர்த்தனர்.