நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு படமும், அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் துணிவு படமும் வருகிற பொங்கல் பண்டிகைக்கு ரிலீசாக உள்ளது. இதில் விஜய் படத்தின் ரிலீஸ் ஏற்கனவே உறுதிசெய்யப்பட்டுவிட்டாலும், அஜித் படத்திற்கான ரிலீஸ் தேதியானது இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் பொங்கலுக்கு வெளியிடும் முனைப்பில் தான் அதன் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் தற்போது உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த ஆண்டு ரிலீசான விஜய்யின் பீஸ்ட், சூர்யாவின் எதற்கும் துணிந்தவன், கமலின் விக்ரம், சிவகார்த்திகேயனின் டான், தனுஷின் திருச்சிற்றம்பலம் என பெரும்பாலான பெரிய நடிகர்களின் படங்களை அந்நிறுவனம் தான் வெளியிட்டுள்ளது.
இதையும் படியுங்கள்... சமந்தா முதல் அனுஷ்கா வரை...தென்னிந்திய நாயகிகளின் பிரியமான உணவு
இதுதவிர அடுத்தமாதம் தீபாவளிக்கு ரிலீசாக உள்ள கார்த்தியின் சர்தார் பட வெளியீட்டு உரிமையையும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் தான் கைப்பற்றி உள்ளது. இதனிடையே பொங்கலுக்கு விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு ஆகிய படங்கள் மோத உள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், அதில் எந்த படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடும் என்கிற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
இந்நிலையில், அதுகுறித்த தகவல் ஒன்றும் கோலிவுட் வட்டாரத்தில் பரவி வருகிறது. அதன்படி அஜித்தின் துணிவு படத்தின் வெளியீட்டு உரிமையை தான் ரெட் ஜெயண்ட் நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டு அஜித் நடிப்பில் ரிலீசான வலிமை படத்தின் வெளியீட்டு உரிமையையும் கைப்பற்றும் முனைப்பில் தான் இருந்தாராம் உதயநிதி. ஆனால் இறுதியில் அந்த வாய்ப்பு நழுவியது. இதனால் துணிவு படத்தின் ரிலீஸ் உரிமையை முன்கூட்டியே தட்டித்தூக்கிவிட்டதாக கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.
இதையும் படியுங்கள்... அவுங்க ஒரு டேமேஜ் ஹீரோயின்... காஃபி வித் காதல் பட விழாவில் மாளவிகாவை நோஸ் கட் பண்ணிய சுந்தர் சி