அவுங்க ஒரு டேமேஜ் ஹீரோயின்... காஃபி வித் காதல் பட விழாவில் மாளவிகாவை நோஸ் கட் பண்ணிய சுந்தர் சி

First Published | Sep 26, 2022, 1:47 PM IST

Sundar C : காஃபி வித் காதல் பட விழாவில் பேசிய சுந்தர் சி, படத்தில் நடித்த நடிகைகள் குறித்தும், ஷூட்டிங்கின் போது அவர்கள் செய்த கலாட்டாவான விஷயங்கள் குறித்தும் பேசினார். 

சுந்தர் சி இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம் காஃபி வித் காதல். இப்படத்தில் ஸ்ரீகாந்த், ஜீவா, ஜெய், சம்யுக்தா, மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைசா வில்சன், சஞ்சிதா ஷெட்டி, டிடி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார். அவ்னி பிக்சர்ஸ் சார்பாக குஷ்பு இப்படத்தை தயாரித்து உள்ளார்.

காஃபி வித் காதல் திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 7-ந் தேதி திரையடங்குகளில் ரிலீசாக உள்ளது. இப்படத்தை தமிழகத்தில் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இப்படத்தின் பிரம்மாண்டமான இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

இதையும் படியுங்கள்... ஐஸ்வர்யா ராய்யின் மகள் ஆராத்யாவுக்கு 'பொன்னியின் செல்வன்' படத்தில் முக்கிய வாய்ப்பு கொடுத்த மணிரத்தினம்!

Tap to resize

இந்த விழாவில் பேசிய சுந்தர் சி, படத்தில் நடித்த நடிகைகள் குறித்தும், ஷூட்டிங்கின் போது அவர்கள் செய்த கலாட்டாவான விஷயங்கள் குறித்தும் பேசினார். அப்போது நடிகை மாளவிகா சர்மா குறித்து பேசும்போது, அவர் ஒரு டேமேஜ் ஹீரோயின் என கிண்டலடித்தார் சுந்தர் சி. அவரை அப்படி சொல்வதற்கான காரணத்தையும் லிஸ்ட் போட்டார்.

அது என்னவென்றால், ஆக்‌ஷன் படத்துல ஹீரோவுக்கு நிறைய அடிபடும். ஆனா ஒரு ரொமாண்டிக் படத்துல அதிகம் அடிபட்ட நடிகைனா அது மாளவிகா சர்மா தான். படத்துல நிறைய சீன் அவங்க இல்லாம எடுக்க வேண்டியதா போச்சு. ஒருநாள் வருவாங்க சார் கண்ணுல அடிபட்டிடுச்சுனு சொல்லி லீவ் போட்ருவாங்க. அது சரியாகி வந்தப்போ, மேக் அப் மேல் தலைக்கு போடுற ட்ரிரையர கைக்கு போட்டுவிட்டுட்டான். அதனால் கையெல்லாம் வீங்கிடுச்சு. 

அதுமாதிரி ஒரு சாங் ஷூட் பண்ணப்போ, முட்டி வீங்கிடுச்சு. படம் முழுக்க ஒரு டேமேஜ் ஹீரோயினா தான் இருந்தாங்க. அவுங்க வக்கீல்னு வேற சொன்னாங்க. பயங்கரமா சட்டம் பேசுவாங்கனு பார்த்தா, ரொம்ப அப்ராணியா இருந்தாங்க” என சுந்தர் சி கூறினார்.

இதையும் படியுங்கள்... வனிதாவுடன் காதல் சர்ச்சையில் சிக்கிய பிரபலத்தை போட்டியாளராக களமிறக்கும் பிக்பாஸ்- இதென்ன புதுடுவிஸ்டா இருக்கு!

Latest Videos

click me!