திருமணத்திற்கு பின்னர் தரமான கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வரும் நடிகை ஐஸ்வர்யா ராய், ராவணன் படத்திற்கு பின், மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் இணைந்து நடித்துள்ள திரைப்படம், 'பொன்னியின் செல்வன்'. இயக்குனர் மணிரத்னத்தின் கனவு படமாக உருவாகியுள்ள இந்த படம், இரண்டு பாகங்களாக வெளியாக உள்ள நிலையில், முதல் பாகத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து தற்போது புரோமோஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
அதாவது இயக்குனர் மணிரத்னம் 'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பின் போது, முக்கிய பொறுப்பை ஒன்றை கொடுத்ததாக கூறியுள்ளார். நடிகை ஐஸ்வர்யா ராய், 'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பின் போது, சில சமயங்களில் தன்னுடைய மகள் ஆராத்யாவையும் கூடவே அழைத்து வருவதை வழக்கமாக வைத்திருந்தார். அப்போது அம்மாவுடனே ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வரும் ஆராத்யாவுக்கு இயக்குனர்கள் மட்டுமே சொல்லக்கூடிய வார்த்தையான, 'ஆக்சன்' என்று சொல்லும் பொறுப்பை கொடுத்ததாக கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்: STR என தன்னையே கூறிக்கொண்டு... மன்மதனாக மாறிய கூல் சுரேஷ்! நடிகையின் தொடையை பிடித்தபடி வெளியான புகைப்படம்!
தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் முக்கிய நடிகர் நடிகைகளான, சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, பார்த்திபன், சரத்குமார், பிரபு, விக்ரம் பிரபு, திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், போன்ற பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்தை, லைகா நிறுவனம் மிக பிரமாண்டமாக தயாரித்துள்ளது. இந்த படம் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்: இதை மட்டும் செய்யாதீர்... மீறினால் தக்க நடவடிக்கை! சூர்யா 42 படக்குழு விடுத்த பகீர் எச்சரிக்கை!