வனிதாவுடன் காதல் சர்ச்சையில் சிக்கிய பிரபலத்தை போட்டியாளராக களமிறக்கும் பிக்பாஸ்- இதென்ன புதுடுவிஸ்டா இருக்கு!

Published : Sep 26, 2022, 01:04 PM IST

BiggBoss Tamil 6 : அக்டோபர் 2-ந் தேதி துவங்கப்படும் என கூறப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன், சில தவிர்க்க முடியாத காரணத்தால் ஒருவாரம் தாமதமாக தொடங்கப்பட உள்ளது.

PREV
14
வனிதாவுடன் காதல் சர்ச்சையில் சிக்கிய பிரபலத்தை போட்டியாளராக களமிறக்கும் பிக்பாஸ்- இதென்ன புதுடுவிஸ்டா இருக்கு!

தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிகழ்ச்சியை கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை ஐந்து சீசன்கள் முடிந்துள்ளது. தற்போது 6-வது சீசனுக்கான ஆரம்பக்கட்ட படங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியை அடுத்தமாதம் தொடங்க உள்ளனர். இந்த முறையும் இந்நிகழ்ச்சியை கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க உள்ளார்.

24

பிக்பாஸ் 6-வது சீசன் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ள போட்டியாளர்கள் குறித்து விவரங்களை இதுவரை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வெளியிடாமல் சீக்ரெட்டாக வைத்துள்ளார்கள். இருப்பினும் அவ்வப்போது அதுகுறித்த தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி, நடிகை மனிஷா யாதவ், தொகுப்பாளினி அஞ்சனா, சீரியல் நடிகை அர்ச்சனா, நடிகர் அஜ்மல் உள்பட ஏராளமானோர் கலந்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... முன்பதிவில் மாஸ் காட்டும் பொன்னியின் செல்வன்... காத்து வாங்கும் நானே வருவேன் - தப்பிப்பாரா தனுஷ்?

34

இந்நிலையில், தற்போது புது வரவாக அந்த லிஸ்டில் இணைந்துள்ளவர் ராபர்ட் மாஸ்டர். விஜய், சிம்பு போன்ற முன்னணி நடிகர்களுடன் பணியாற்றியுள்ள இவர், கடந்த சில ஆண்டுகளுக்கு நடிகை வனிதா உடன் காதல் சர்ச்சையில் சிக்கினார். இருவரும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் இருவரும் பிரிந்துவிட்டனர்.

44

ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் மிகவும் பேமஸ் ஆன போட்டியாளர் என்றால் அது வனிதா தான். அவர் மூன்றாவது சீசனில் கலந்துகொண்டு அனைத்து போட்டியாளர்களையும் அலறவிட்டார். இந்நிலையில், தற்போது அவருடன் காதல் சர்ச்சையில் சிக்கிய ராபர்ட் மாஸ்டர் 6-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொள்ள உள்ளதால் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்... இந்த வயதிலும் திரிஷா சிக்கென இருக்க என்ன காரணம் தெரியுமா?

Read more Photos on
click me!

Recommended Stories