அனிருத்தின் தாத்தா... பிரபல இசையமைப்பாளர் எஸ்.வி. ரமணனன் காலமானார்

Published : Sep 26, 2022, 11:10 AM IST

அனிருத்தின் தாத்தாவும், இசையமைப்பாளருமான எஸ்.வி. ரமணனனின் மறைவுக்கு ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

PREV
12
அனிருத்தின் தாத்தா... பிரபல இசையமைப்பாளர் எஸ்.வி. ரமணனன் காலமானார்

தமிழ் திரையுலகில் தற்போதைய டாப் இசையமைப்பாளர்களில் முன்னணி இடத்தில் இருப்பவர் அனிருத். இவரது தாத்தாவும், பழம்பெரும் இசையமைப்பாளருமான எஸ்.வி.ரமணன் இன்று காலை காலமானார். 

எஸ்.வி ரமணன், வானொலி விளம்பரங்களுக்கு குரல் கொடுத்ததன் மூலம் மிகவும் பேமஸ் ஆனார். இவரது குரலுக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமே இருந்தது. இவர் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட ஆவணப்படங்களையும் தயாரித்து உள்ளார். இவரது ஆவணப்படம் ஒன்றிற்கு நடிகர் ரஜினிகாந்தும் குரல் கொடுத்து இருந்தார்.

இதையும் படியுங்கள்.. விக்ரம் முதல் பொன்னியின் செல்வன் வரை.. OTT உரிமை மட்டும் ரூ.100 கோடிக்கு மேல் விற்கப்பட்ட படங்களின் லிஸ்ட் இதோ

22

சென்னை ஆர்.ஏ.புரத்தில் வசித்து வந்த எஸ்.வி.ரமணன் வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். மக்கள் தொடர்பு கலையில் இவர் செய்த சாதனைக்காக இவருக்கு டாக்டர் பட்டமும் வழங்கப்பட்டது. இவர் நடிகர் ரஜினிகாந்தை ஒருமுறை நேர்காணலும் செய்துள்ளார்.

இசையமைப்பாளர் எஸ்.வி. ரமணனனின் மறைவுக்கு ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவரது இறுதிச் சடங்கு இன்று மாலை நடைபெற உள்ளது. இவர் திரைப்பட தயாரிப்பாளர் கே.சுப்ரமணியத்தின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்.. அக்கா மகளை காப்பாற்றினால் ...கூல் சுரேஷை விட சிம்புவிற்கு அதிகமாக குரல் கொடுப்பேன் : விஜயலட்சுமி

Read more Photos on
click me!

Recommended Stories