மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. அதில் நந்தினி என்கிற மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளார்.
இப்படத்தில் நந்தினியின் கணவரான பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடிகர் சரத்குமார் நடித்துள்ளார். அதேபோல் சின்ன பழுவேட்டரையராக நடிகர் பார்த்திபன் நடித்து இருக்கிறார்.
அந்த வகையில் பொன்னியின் செல்வன் படத்தில் சின்ன பழுவேட்டரையராக நடித்துள்ள நடிகர் பார்த்திபன், ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகை ஐஸ்வர்யா ராயுடன் எடுத்த BTS போட்டோக்களை பகிர்ந்து ஒரு நீண்ட பதிவையும் போட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது : “ஐஸ் வாரியம் ! கற்றுக் கொள்ள…. காற்று கொள்ளும் மூங்கில் துளைகளில் இருந்து இசை வரும் என கோடியாய் கொட்டிக் கிடக்கின்றது இப்பூமியில். அப்படி இப்பெண்ணிடமிருந்து… தாயானப் பிறகும், தான் விரும்பும் கலையை தொடர, ஆரோக்கியத்தை+அழகை காத்திட கடும் முயற்சியும், விடா பயிற்சியும் செய்கிறார்.