நடிகர் ரஜினியின் 169-வது படம் ஜெயிலர். நெல்சன் இயக்கும் இப்படத்தில் நடிகர் ரஜினிக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் யோகிபாபு, வஸந்த் ரவி, தமன்னா, ஷிவ ராஜ்குமார் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.
24
ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் உள்ள ஆதித்யராம் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. அங்கு பிரம்மாண்ட செட் அமைத்து படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். இப்படத்திற்கு பின்னர் நடிகர் ரஜினி நடிக்க உள்ள 170-வது படத்தை சிபி சக்ரவர்த்தி இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவர் நடிகர் சிவகார்த்திகேயனின் டான் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்.
ரஜினி - சிபி இணைய உள்ள படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாம். இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருகிற டிசம்பர் மாதம் ரஜினியின் பிறந்தநாளை ஒட்டி ரிலீசாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இப்படத்திற்காக நடிகர் ரஜினிகாந்த் வாங்க உள்ள சம்பளம் குறித்த விவரம் வெளியாகி இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
44
அதன்படி இப்படத்தில் நடிக்க ரஜினிக்கு ரூ.120 கோடி சம்பளமாக வழங்கப்பட உள்ளதாக பேச்சு அடிபடுகிறது. அண்ணாத்த படத்தின் தோல்வியால், ஜெயிலர் படத்திற்கு நடிகர் ரஜினி சம்பளத்தை குறைத்துக் கொண்டதாக கூறப்பட்ட நிலையில், தற்போது தலைவர் 170 படத்துக்காக அவர் வாங்க உள்ள பிரம்மாண்ட தொகை பலரையும் ஆச்சர்யப்படுத்தி உள்ளது. மறுபுறம் கமல் இந்தியன் 2 படத்துக்காக ரூ.150 கோடி சம்பளமாக வாங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.