நடிகர் சூர்யா, இயக்குனர் சிறுத்தை சிவாவுடன் இணைய உள்ள படத்திற்கு இன்னும் பெயரிடப்படாத நிலையில், சூர்யா 42 என தற்காலிகமாக அழைக்கப்பட்டு வருகிறது. 3டி-யில் உருவாக உள்ள இந்த படம் குறித்த அடுத்தடுத்த தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வருகிறது. அதன் படி இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை திஷா பெதானி நடிக்க உள்ளதாகவும், சுமார் 10 மொழிகளில் இந்த படத்தை பான் இந்தியா படமாக வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.