முன்பதிவில் மாஸ் காட்டும் பொன்னியின் செல்வன்... காத்து வாங்கும் நானே வருவேன் - தப்பிப்பாரா தனுஷ்?

First Published Sep 26, 2022, 12:05 PM IST

Naane Varuven : தனுஷின் நானே வருவேன் படத்திற்கு சுத்தமாக புரமோஷன் செய்யப்படாத காரணத்தால், அப்படத்தின் முன்பதிவும் படு மந்தமாக நடைபெற்று வருகிறது. 

நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த மாதம் ரிலீசான திருச்சிற்றம்பலம் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. மித்ரன் ஆர் ஜவகர் இயக்கிய இப்படத்தில் நடிகர் தனுஷ் உணவு டெலிவரி செய்பவராக நடித்திருந்தார். அனிருத் இசையில் பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆனது. அதேபோல் இப்படமும் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

திருச்சிற்றம்பலம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள படம் நானே வருவேன். இப்படத்தை தனுஷின் அண்ணனும், பிரபல இயக்குனருமான செல்வராகவன் இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வனுக்கு போட்டியாக நானே வருவேன் திரைப்படத்தை ரிலீஸ் செய்ய உள்ளனர். நானே வருவேன் படம் வருகிற செப்டம்பர் 29-ந் தேதியும், பொன்னியின் செல்வன் படம் செப்டம்பர் 30-ந் தேதியும் ரிலீஸாக உள்ளது. பொன்னியின் செல்வனுக்கு போட்டியாக ரிலீஸ் செய்ய வேண்டாம் என தனுஷ் ரசிகர்களே கோரிக்கை விடுத்து வந்தனர். அதையும் மீறி தற்போது வெளியிட உள்ளனர்.

இதையும் படியுங்கள்... அனிருத்தின் தாத்தா... பிரபல இசையமைப்பாளர் எஸ்.வி. ரமணனன் காலமானார்

பொன்னியின் செல்வன் படத்தை பிரம்மாண்டமாக புரமோட் செய்து வருகின்றனர். அதன் பயனாக அப்படத்தின் முன்பதிவும் படு ஜோராக நடந்து வருகிறது. ஏராளமான இடங்களில் முதல் நாள் முழுவதும் ஹவுஸ்புல் ஆகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. மறுபக்கம் நானே வருவேன் படத்தின் நிலைமை படு மோசமாக உள்ளது.

இப்படத்திற்கு சுத்தமாக புரமோஷன் செய்யப்படாத காரணத்தால், அப்படத்தின் முன்பதிவும் படு மந்தமாக நடைபெற்று வருகிறது. பெரும்பாலான இடங்களில் முன்பதிவு செய்ய ஆள் இல்லாமல் காத்து வாங்கும் சூழல் தான் இப்படத்துக்கு உள்ளது. படமும் குறைவான தியேட்டர்களில் மட்டுமே ரிலீஸ் செய்யப்பட உள்ளதால், வசூல் எதிர்பார்த்த அளவுக்கு இருக்குமா என்பதும் சந்தேகம் தான் என கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.

இதையும் படியுங்கள்... விக்ரம் முதல் பொன்னியின் செல்வன் வரை.. OTT உரிமை மட்டும் ரூ.100 கோடிக்கு மேல் விற்கப்பட்ட படங்களின் லிஸ்ட் இதோ

click me!