தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த ராஷ்மிகா, கடந்த 2021-ம் ஆண்டு வெளிவந்த சுல்தான் படம் மூலம் கோலிவுட்டில் எண்ட்ரி கொடுத்தார். இதையடுத்து நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு ராஷ்மிகாவுக்கு கிடைத்தது. அதன்படி வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து கோலிவுட்டிலும் முன்னணி நடிகையாக உயர்ந்தார் ராஷ்மிகா. தற்போது இவர் பாலிவுட்டில் பிசியாக நடித்து வரும் நிலையில், மேலும் ஒரு தமிழ்படத்தில் நடிக்க கமிட் ஆகி உள்ளார்.
எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் ராஷ்மிகா நடிக்கும் இரண்டாவது படம் இதுவாகும். இதற்கு முன் அவர்கள் தயாரித்த சுல்தான் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் ராஷ்மிகா. இப்படத்தில் முதலில் நாயகியாக நடிக்க இருந்தது சமந்தா தான். அவருக்கு மயோசிடிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்ட காரணத்தில் இதில் நடிக்க முடியாது என அவர் விலகியதால் தற்போது அந்த வாய்ப்பு நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு சென்றுள்ளது.