தமிழ் திரையுலகின் சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் தற்போது ஜெயிலர் படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். நெல்சன் இயக்கும் இப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் ரிலீசாக உள்ளதாக கூறப்படுகிறது. இதுதவிர லால் சலாம் மற்றும் ஜெய் பீம் இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் ஒரு படம் என மேலும் இரண்டு படங்களை கைவசம் வைத்து உள்ளார். இப்படி பிசியான நடிகராக வலம் வரும் ரஜினி கடந்த சில தினங்களுக்கு முன் மும்பைக்கு சென்றிருந்தார்.
அங்கு முகேஷ் அம்பானியின் மனைவி நீடா அம்பானி தொடங்கி இருக்கும் கலாச்சார மையத்தின் திறப்பு விழாவில் கலந்துகொண்டார். அப்போது ரஜினியுடன் அவரது மகள் செளந்தர்யாவும் உடன் சென்றிருந்தார். மொத்தம் 4 அடுக்குகளில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள நீடா அம்பானியின் கலாச்சார மையத்தில் 2000 பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய பிரம்மாண்ட அரங்கம், ஸ்டூடியோ என ஏராளமான வசதிகளும் உள்ளன.
இதனை சாத்தியமாக்கிய என்னுடைய அருமை நண்பர் முகேஷ் அம்பானிக்கு வாழ்த்துக்கள். இதுபோன்ற அற்புதமான, தேசபக்தியுடனான மனதைக் கவரும் கலை நிகழ்ச்சிகளை நடத்திய நீதா அம்பானியை வாழ்த்த வார்த்தைகள் இல்லை. இதுபோன்ற ஒரு பிரம்மாண்டமான தியேட்டரில் நடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசையாக இருந்து வருகிறது. விரைவில் அது நிறைவேறும் என நம்புகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.