இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் பிரபுதேவா. பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான், பிரபுதேவாவின் தீவிர ரசிகராம், அதன்காரணமாக தான் அவர் இயக்கத்தில் அடுத்தடுத்து நடித்தார். பிரபுதேவா பரத நாட்டியம் நடனம் ஆடுவதில் வல்லவராக இருந்தாலும், காதலன் படத்தில் இடம்பெற்ற முக்காபுலா பாடல் மூலம் தனக்கென்று ஒரு ஸ்டைலை உருவாக்கி அதன்மூலம் புகழ் பெற்றார்.
பிரபுதேவா கடந்த 1995-ம் ஆண்டு ரம்லத் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு மூன்று குழந்தைகளும் பிறந்தன. அதில் ஒரு மகன் மட்டும் கேன்சர் பாதிப்பால் கடந்த 2008-ம் ஆண்டு உயிரிழந்துவிட்டார். இதையடுத்து மனைவியை பிரிந்து வாழத்தொடங்கிய பிரபுதேவாவுக்கு நயன்தாரா உடன் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது காதலாகவும் மாறியது.