நடிகர் விஜய், தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவருக்கென உலகளவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. நடிகர் விஜய் சோசியல் மீடியாவை பெரியளவில் பயன்படுத்துவதில்லை. இருப்பினும் அவருக்கு டுவிட்டரில் மில்லியன் கணக்கிலான பாலோவர்கள் இருக்கிறார்கள். இதுவரை டுவிட்டரில் மட்டும் ஆக்டிவாக இருந்து வந்த விஜய், நேற்று திடீரென இன்ஸ்டாகிராமிலும் இணைந்து புதிதாக கணக்கு ஒன்றை தொடங்கினார்.
நடிகர் விஜய்யின் இன்ஸ்டாகிராம் எண்ட்ரி தான் நேற்று பேசுபொருளாக இருந்தது. அவர் இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கியதும் போட்ட முதல் பதிவு, லியோ படத்தின் ஷூட்டிங்கிற்காக காஷ்மீரில் எடுத்த புகைப்படம் தான். அந்த புகைப்படத்தை பதிவிட்டு, ஹலோ நண்பாஸ் & நண்பீஸ் என்கிற பதிவு தான். இந்த ஒரே பதிவுக்கு மில்லியன் கணக்கில் லைக்குகள் குவிந்து வருகின்றன.