தற்போது தமிழில் இளம் நடிகையாக இருக்கும் திவ்ய பாரதி கோயம்புத்தூரை சேர்ந்தவர். 2015 ஆம் ஆண்டு நடந்த அழகி போட்டியில் வெற்றி பெற்றது, மாடலிங் துறையில் இவர் அழுத்தமாக கால் பாதிக்க காரணமாக அமைந்தது.
தற்போது அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வரும் திவ்ய பாரதி, பிக்பாஸ் முகென் ராவ் ஜோடியாக 'மதில் மேல் காதல்' படத்தில் நடித்து வருகிறார். மேலும் நடிகர் கதிருக்கு ஜோடியாக ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.
இது போன்ற விமர்சனங்கள் தன்னை கடுமையாகப் பாதித்தது என்றும், என் உடலை வெறுக்கும் அளவுக்கு என்னைத் தள்ளியது என்றும்... இதனால் மக்கள் முன் நடக்க கூட பயமாக இருந்தது என தெரிவித்திருந்தார்.
வித்தியாசமான உடல் அமைப்பைக் கொண்டிருப்பது பரவாயில்லை, அந்த விமர்சனங்களுக்கு மத்தியில் நீங்கள் உங்களை எப்படி நேசிக்கிறீர்கள் என்பதைப் பற்றியது என பாசிட்டிவாக பேசிய திவ்யா பாரதியின் கல்லூரி கால புகைப்படங்கள் சில தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.