நயன்தாரா தன் மகன்களுக்கு என்ன பெயர் சூட்டியுள்ளார் தெரியுமா? மேடையில் அறிவித்து ஆச்சரிப்பட வைத்துள்ளார்!

Published : Apr 02, 2023, 10:39 PM IST

நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியின், ட்வின்ஸ் மகன்களின் உண்மையான பெயர் என்ன என்பது குறித்த தகவல் தற்போது நயன்தாரா விருது விழாவில் அறிவித்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.  

PREV
17
நயன்தாரா தன் மகன்களுக்கு என்ன பெயர் சூட்டியுள்ளார் தெரியுமா? மேடையில் அறிவித்து ஆச்சரிப்பட வைத்துள்ளார்!

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்து வரும் நடிகை நயன்தாரா முதல் முறையாக தன்னுடைய மகன்கள் பெயர் என்ன என்பது குறித்து அறிவித்துள்ளார்.

27

கடந்த 20 வருடங்களாக தென்னிந்திய திரையுலகில், முன்னணி நடிகையாகவும்.. தமிழ் சினிமாவில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தையும், தனதாக்கி கொண்டுள்ளவர் நடிகை நயன்தாரா. நடிப்பை தாண்டி தயாரிப்பாளர், தொழிலதிபர், என பன்முகத் திறமையோடு விளங்கும் நயன்தாரா, முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கும் படங்களை விட, கதையின் நாயகியாக நடிக்கும் படங்களையே அதிகம் தேர்வு செய்து நடித்து வருவதில் கவனம் செலுத்துகிறார்.

என்ன விசேஷம்? முதல் முறையாக குடும்பத்தினருடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை பகிர்ந்த ரம்யா பாண்டியன்!
 

37

இந்நிலையில்  தன்னுடைய நீண்ட நாள் காதலனான, விக்னேஷ் சிவனை கடந்த ஆண்டு ஜூன் மாதம்  பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார் நயன்தாரா. இவர்களின் திருமணம் சென்னை மாமல்லபுரம் அருகே உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற நிலையில், தமிழ் சினிமாவின் முன்னணி பிரபலங்கள் பலர் இவர்களின், திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

47

திருமணம் ஆன நான்கே மாதத்தில், வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றதை அறிவித்து...  இன்ப அதிர்ச்சி கொடுத்தார் நயன்தாரா. மேலும் நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணமாகிய நான்கே மாதத்தில், வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டது, மிகப்பெரிய சர்ச்சையாக உருவெடுத்தது. இது குறித்து விசாரணை நடத்த அரசு தரப்பில்,  உத்தரவிடப்பட்ட நிலையில்... நயன்தாரா - விக்னேஷ் சிவன் தரப்பில் இருந்து தங்களுக்கு 2016 ஆம் ஆண்டே பதிவு திருமணம் நடந்து விட்டதாகவும், மருத்துவரின் அனுமதியோடு உரிய முறைப்படி தான் குழந்தை பெற்றுள்ளதாகவும் கூறி, அதற்கான ஆதாரங்களை சமர்ப்பித்த பின்னர் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

இன்ஸ்டாகிராமில் இணைந்த ஒரு மணி நேரத்தில் ஒரு மில்லியன் ஃபாலாவேர்ஸ்..! மாஸ் காட்டும் தளபதி விஜய்..!

57

தற்போது தொடர்ந்து திரைப்படங்களில் கவனம் செலுத்தி வரும் நயன்தாரா, தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆகிய மொழிகளை தொடர்ந்து... பாலிவுட்டிலும் கால் பதித்துள்ளார். இயக்குனர் அட்லி, ஷாருக்கானை வைத்து இயக்கி வரும், 'ஜவான்' படத்தில் நயன்தாரா தான் ஹீரோயினாக நடித்து வருகிறார்.  இந்த படத்தின் படபிடிப்பு சமீபத்தில் கலந்து கொண்ட போது, குழந்தைகளுடன் நயன்தாரா ஏர்போர்ட் வந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் படு வைரலானது.

67

இந்நிலையில் விருது விழா ஒன்றில் கலந்து கொண்ட நடிகை நயன்தாரா, முதல் முறையாக தன்னுடைய இரட்டை குழந்தைகளின் பெயர்களை அறிவித்துள்ளார். இதுவரை விக்னேஷ் சிவன் தன்னுடைய  குழந்தைகளை உயிர் - உலகம் என்று குறிப்பிட்டு கூறி வந்த நிலையில்,இவர்களின் பெயர்கள் யாரும் எதிர்பாராத விதத்தில் மிகவும் வித்தியாசமானதாகவே உள்ளது.

தீ விபத்தில் சிக்கிய 'வனத்தைப்போல' சீரியல்' நடிகர் ஸ்ரீகுமார்.! கார் விபத்தில் படுகாயமடைந்த மற்றொரு பிரபலம்!
 

77

அதன்படி ஒரு மகனுக்கு 'உயிர் ருத்ரேனில் என் சிவன்' என்றும் மற்றொரு பிள்ளைக்கு 'உலக தெய்வேக் என் சிவன்' என்றும் பெயர் சூட்டியுள்ளனர். மகள்களுக்கு இவர்கள் வைத்துள்ள, வித்தியாசமான பெயர்களை கேட்டு, ரசிகர்களும் ஆச்சர்யத்தோடு தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories