தமிழ் திரையுலகில் நடிகர் அஜித்குமாரின் ஆஸ்த்தான இயக்குனர்களில் ஒருவர் சிறுத்தை சிவா. அஜித்தை வைத்து தொடர்ந்து வீரம், விவேகம், வேதாளம், விஸ்வாசம் ஆகிய 4படங்களை இயக்கி ஒட்டுமொத்த இயக்குனர்களையுமே ஆச்சர்யப்பட செய்தார். காரணம் அஜித் போன்ற பெரிய நடிகர்களுடன் ஒரு பதிலாவது இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது பல இயக்குனர்களின் கனவு. ஆனால் அந்த வாய்ப்பு சிறுத்தை சிவாவுக்கு மிக எளிதாகவே கிடைத்தது.
இப்படம் ஃபேண்டஸி கதையம்சம் கொண்ட, பீரியாடிக் பிலிம்மாக எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஒரு மாதமாக இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், விரைவில் அடுத்த கட்ட படப்பிடிக்கு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அவ்வபோது சூர்யா 42 படத்தின் அப்டேட்டுகள் வெளியாகி வருவதும் வழக்கமாக உள்ளது.
அந்த வகையில் தற்போது, இந்த படத்தின் ஸ்ட்ரீமிங் ரைட்ஸை அமேசான் நிறுவனம் கைப்பற்றி உள்ளதாகவும், இதுவரை விற்பனை செய்யப்பட்ட படங்களில்... இரண்டாவது மிகப்பெரிய தொகைக்கு இப்படம் விறபனையாகியுள்ளதாம். இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக, பிரபலா பாலிவுட் நடிகை திரிஷா பதானி நடித்து வருகிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகி வரும் இந்த படத்தில் சூர்யா மூன்றுக்கும் மேற்பட்ட கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது அதுபோல் இப்படத்தின் டைட்டில் மற்றும் டீசர் குறித்த தகவல் இம்மாத இறுதியில் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
தீ விபத்தில் சிக்கிய 'வனத்தைப்போல' சீரியல்' நடிகர் ஸ்ரீகுமார்.! கார் விபத்தில் படுகாயமடைந்த மற்றொரு பிரபலம்!