சமீப காலமாகவே, சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கும் அதில் நடித்து வரும் நடிகர்களுக்கும், மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் சன் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் வானத்தைப்போல.
தற்போது சின்ராசு கதாபாத்திரத்தில் நடிகர் ஸ்ரீகுமாரும், துளசி கதாபாத்திரத்தில் மான்யா ஆனந்த் ஆகியோர் நடித்து வருகின்றனர். எப்படி தமன் மற்றும் ஸ்வேதா ஆகியோருக்கு ரசிகர்கள் மத்தியில் எப்படி வரவேற்பு கிடைத்ததோ, அதேபோல் இவர்கள் இருவரின் நடிப்பும் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த சீரியலில் நடித்து வரும் இரு பிரபலங்களுக்கு அடுத்தடுத்து வெவேறு விபத்துகளில் சிக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 'வானதைப்போல' சீரியலில் சின்ராசுவின் மாமா முத்தையா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் இயக்குனர் மனோஜ் குமார். சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த இவர், கடந்த மார்ச் 31ம் தேதி காலை தன்னுடைய காரில், மனைவி செல்வி மற்றும் உதவியாளர் ரகுபதி என்பவருடன் இணைந்து தேனிக்கு புறப்பட்டுள்ளார். இவர்களுடைய கார் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவண்டி அருகே சென்று கொண்டிருந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
அதேபோல் 'வானத்தைப்போல' சீரியலில் சின்ராசு கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஹீரோ ஸ்ரீகுமார் தீ விபத்தில் சிக்கி உள்ளார். சென்னை பாண்டி பஜாரில் சமீபத்தில் வணிக வளாகத்தில் நடந்த திடீர் தீ விபத்தின் போது நடிகர் ஸ்ரீகுமார் மற்றும் அவருடைய குடும்பத்தினர் அந்த வணிக வளாகத்தின் உள்ளே இருந்ததாகவும், அப்போது விபத்தில் சிக்கிய 70 நபர்களில் நடிகர் ஸ்ரீகுமாரும் ஒருவர் என கூறப்படுகிறது. எனினும் பெரிதாக எவ்வித அசம்பாவிதமும் நேராமல் அனைவருமே பத்திரமாக வெளியேறினார். இந்த விபத்தில் நடிகர் ஸ்ரீகுமார் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.