வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி உள்ள திரைப்படம் விடுதலை. சூரி மற்றும் விஜய் சேதுபதி கூட்டணியில் வெளியாகி இருக்கும் இப்படத்தில் ஹீரோயினாக ஜிவி பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ நடித்துள்ளார். மேலும் ராஜீவ் மேனன், கவுதம் மேனன், தமிழ், சேத்தன், வேல்ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது. எல்ரெட் குமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து உள்ளார்.
24
விடுதலை திரைப்படம் இரண்டு பாகங்களாக தயாராகி உள்ளது. அப்படத்தின் முதல்பாகம் கடந்த மார்ச் 31-ந் தேதி ரிலீஸ் ஆனது. இப்படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தான் ரிலீஸ் செய்துள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளிவந்த இத்திரைப்படம் விமர்சகர்களின் பாராட்டு மழையில் நனைந்து வருகிறது. இதுவும் வெற்றிமாறனின் மாஸ்டர் பீஸ் என கொண்டாடி வருகின்றனர்.
விடுதலை படத்திற்கு பாசிடிவ் விமர்சனங்கள் கிடைத்து வருவதால் இப்படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதன்படி இப்படம் ரிலீஸான முதல் நாளில் ரூ.6.5 கோடி வசூலித்து இருந்தது. நேற்று விடுமுறை நாள் என்பதால் இப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்த்தபடியே விடுதலை படத்தின் வசூல் முதல் நாளை விட 15 சதவீதம் அதிகரித்து உள்ளதாக கூறப்படுகிறது.
44
அதன்படி இப்படம் நேற்று மட்டும் ரூ. 7.5 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல் நாளை விட இரண்டாம் நாளில் அதிக கலெக்ஷன் அள்ளி உள்ள விடுதலை திரைப்படம் இன்று ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடி வருவதால் இன்றைய வசூலும் முதல் இரண்டு நாட்களை விட அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி விடுதலை படத்துக்கு கிடைக்கும் வரவேற்பால் அப்படத்திற்கு தியேட்டர்களும் அதிகரிக்கப்பட்டு வருகிறதாம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.