ஆடிசன் செய்ய வேண்டும் எனக்கூறி இரவு மசாஜ் செண்டருக்கு வருமாறு கேஸ்டிங் டிரைக்டர் ஒருவர் அழைப்பு விடுத்ததாக பிக்பாஸ் பிரபலம் பகீர் புகார் தெரிவித்துள்ளார்.
சினிமாவில் பாலியல் துன்புறுத்தல்கள் அதிகளவில் இருப்பதாக நடிகைகள் பலர் தொடர்ந்து புகார் கொடுத்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாகவே இதுகுறித்து மீடூவில் வெளிப்படையாக பேசி வருகின்றனர். ஆனால் சமீப காலமாக நடிகர்களும் இதுகுறித்து மனம்திறந்து பேசி வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடிகர் ரவி கிஷான் தனக்கு நடிகை ஒருவர் இரவு அழைத்ததாக கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.
24
இந்நிலையில், தற்போது மேலும் ஒரு பாலிவுட் நடிகர் தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகள் குறித்து மனம்திறந்து பேசி உள்ளார். பாலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் நடிகரான ஷிவ தகாரே என்பவர், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். இந்நிகழ்ச்சியின் மூலம் இவருக்கும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உருவானது. தற்போது இவர் பாலிவுட் படங்களில் பிசியாக நடித்து வந்தாலும், சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் தான் சந்தித்த கசப்பான அனுபவங்கள் குறித்து பேசி உள்ளார்.
அதன்படி நடிகர் ஷிவ தகாரேவை காஸ்டிங் இயக்குனர் ஒருவர் இரவு 11 மணிக்கு ஆடிசனுக்கு வருமாறு அழைத்தாராம். இதையடுத்து எங்கு வர வேண்டும் என கேட்டதற்கு மசாஜ் செண்டருக்கு வருமாறு கூறினாராம். 11 மணிக்கு மசாஜ் செண்டருக்கு அழைத்ததை அடுத்து உஷாரான நடிகர் ஷிவ தகாரே, அங்கு செல்ல மறுத்துவிட்டாராம். இதுதவிர பெண் ஒருவர் தன்னை இரவு நேரத்தில் வீட்டுக்கு வருமாறு அழைத்ததாகவும் ஷிவ தகாரே தெரிவித்துள்ளார்.
44
அந்த பெண்ணின் அழைப்பை நிராகரித்தபோது, தன்னிடம் இரவு வந்தவர்கள் எல்லாம் தற்போது பாலிவுட்டில் முன்னணி ஹீரோக்களாக இருக்கிறார்கள் என்றும், நீ வரவில்லை என்றால் உனக்கு சினிமா வாய்ப்புகள் கிடைக்காதபடி செய்துவிடுவேன் எனவும் அந்த பெண் மிரட்டியதாக ஷிவ தகாரே கூறியுள்ளார். இருப்பினும் அந்த பெண் யார், அவர் ஒரு நடிகையா அல்லது இயக்குனரா என்கிற தகவாலை அவர் வெளியிட மறுத்துவிட்டார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.