ஒரு படம் பிளாப் ஆனால் இப்படியா அவமானப்படுத்துவது...! விருது விழாவில் நெல்சனுக்கு நேர்ந்த கொடுமை

Published : Apr 02, 2023, 09:44 AM IST

டாக்டர், கோலமாவு கோகிலா போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய நெல்சன், விருது விழாவில் அவமானப்படுத்தப்பட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் பேசு பொருள் ஆகி உள்ளது.

PREV
16
ஒரு படம் பிளாப் ஆனால் இப்படியா அவமானப்படுத்துவது...! விருது விழாவில் நெல்சனுக்கு நேர்ந்த கொடுமை

விஜய் டிவி நிகழ்ச்சிகளை இயக்கி அதன்பின் சினிமாவில் எண்ட்ரி கொடுத்தவர் நெல்சன். சிம்புவின் வேட்டை மன்னன் படம் மூலம் அறிமுகமாக இருந்த நெல்சன், அப்படம் டிராப் ஆனதன் காரணமாக நயன்தாரா நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு ரிலீஸ் ஆன கோலமாவு கோகிலா திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக காலடி எடுத்து வைத்தார். நயன்தாரா கதையின் நாயகியாக நடித்திருந்த இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

26

இதையடுத்து தனது நண்பன் சிவகார்த்திகேயன் உடன் முதன்முறையாக கூட்டணி அமைத்த நெல்சன், அவரை வைத்து டாக்டர் படத்தை இயக்கினார். இப்படமும் கடந்த 2021-ம் ஆண்டு வெளியாகி வேறலெவல் ஹிட் அடித்ததோடு பாக்ஸ் ஆபிஸிலும் ரூ.100கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்தது. டாக்டர் படத்துக்கு பின் நெல்சனுக்கு கிடைத்த பிரம்மாண்ட வாய்ப்பு தான் நடிகர் விஜய்யின் பீஸ்ட். இப்படத்தின் மூலம் நெல்சன் ஹாட்ரிக் வெற்றியை ருசிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்படம் படுதோல்வியை சந்தித்தது.

36

பீஸ்ட் படத்தின் தோல்விக்கு நெல்சன் தான் காரணம் எனக்கூறி அப்படம் ரிலீஸ் ஆன சமயத்தில் நெட்டிசன்கள் அவரை கடுமையாக ட்ரோல் செய்தனர். இதன்பின் எப்படியாவது கம்பேக் கொடுக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் சூப்பர்ஸ்டார் உடன் கூட்டணி அமைத்த நெல்சன், அவர் நடிக்கும் ஜெயிலர் படத்தை தற்போது இயக்கி வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்கள்... அந்த நடிகரை பதம் பார்க்கனும்... திருமணமான நடிகர் மீதுள்ள ஆசையை வெளிப்படுத்திய ரேஷ்மா - ஷாக்கான ரசிகர்கள்

46

இந்த நிலையில், சென்னையில் சமீபத்தில் விருது விழா ஒன்று நடத்தப்பட்டது. இதில் நெல்சனும் கலந்துகொண்டார். இந்த விருது விழாவில் சூர்யா, கமல்ஹாசன், வெற்றிமாறன், லோகேஷ் கனகராஜ், மணிரத்னம் உள்பட ஏராளமான பிரபலங்களும் கலந்துகொண்டனர். இந்த விருது விழாவிற்கு வரும் பிரபலங்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

56

அந்த வகையில், விருது விழாவுக்கு வரும் பிரபலங்கள் அனைவரையும், பவுன்சர்கள் வரவேற்று விழா அரங்குக்கு அழைத்து செல்வர். ஆனால் நெல்சன் எண்ட்ரி கொடுத்தபோது, அவர் காரில் இருந்து இறங்கியதும் அவருடன் வந்த இரண்டு பவுன்ஸர்கள் அந்த வழியா போங்க என கைகாட்டிவிட்டு பாதியிலேயே கழன்று சென்றுவிட்டனர். இதனால் மனம் நொந்துபோன நெல்சன் வேதனையுடன் சிரித்தபடி தனது நண்பன் ரெடின் கிங்ஸ்லி உடன் அங்கிருந்து சென்றார்.

66

நெல்சனை இப்படி பவுன்ஸர்கள் பாதியிலேயே கழட்டிவிட்டு சென்றதற்கு காரணம் லோகேஷ் கனகராஜ் அந்த சமயத்தில் வந்தது தான். அவரது கார் வந்தது தெரிந்ததும் நெல்சனை அம்போனு விட்டுவிட்டு லோகேஷை பவுன்ஸர்கள் சூழ்ந்துகொண்டனர். இதைப்பார்த்து மனமுடைந்து போன ரசிகர்கள், ஒரு படம் பிளாப் ஆனதற்காக அவரை இப்படியா அசிங்கப்படுத்துவது என கேள்வி எழுப்பி வருகின்றனர். மீம் கிரியேட்டர்களும் இந்த சம்பவம் குறித்து மீம்ஸ்களை போட்டு வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... இதெல்லாம் ரொம்ப ஓவர்... சூர்யா குடும்பத்தின் செயலால் கடுப்பான நெட்டிசன்கள் - சர்ச்சைக்குள்ளான கீழடி விசிட்..!

click me!

Recommended Stories