தமிழ் திரையுலகில் காமெடி நடிகராக கலக்கி வந்தவர் சூரி. குறிப்பாக இவர் அறிமுகமான வெண்ணிலா கபடிக்குழு படத்தில் இவர் நடித்த பரோட்டா காமெடி இன்றளவும் கொண்டாடப்படுகிறது. இதன்பின்னர் அவரை பரோட்டா சூரி என்று அழைக்கும் அளவுக்கு மிகவும் பேமஸ் ஆனார். இதையடுத்து விஜய், அஜித், ரஜினி என பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடியனாக கலக்கி வந்த சூரி, தற்போது ஹீரோவாகவும் அவதாரம் எடுத்துள்ளார்.