நடிகை ரம்யா பாண்டியன், திரையுலக பின்புலம் கொண்ட குடும்பத்தை சேர்ந்தவர் என்றாலும், இதை ஒரு இடத்தில் கூட அவர் வெளிப்படுத்தியதே இல்லை. இவ்வளவு ஏன், தன்னுடைய சினிமா கேரியரை கூட... சினிமா மேல் தனக்கிருந்த தனி பட்ட ஆர்வத்தின் காரணமாகவே துவங்கிய இவர், ஆரம்பத்தில் ஷார்ட் பிலிமில் நடிக்க துவங்கி, பின்னர் திரைப்பட வாய்ப்புகளையும் கைப்பற்றினார்.
இந்த படத்தை தொடர்ந்து, ரம்யா பாண்டியன் இயக்குனர் ராஜு முருகன் நடித்த ஜோக்கர், படத்தில் சிறு கதாபாத்திரம் என்றாலும் பெரிய அளவில், ரீச் கிடைத்தது. வெற்றிப்படத்தை கொடுத்த பின்னரும் கண்டுகொள்ள படாத நடிகையாகவே இருந்த, ரம்யா பாண்டியன்.. சமுத்திர கனிக்கு ஜோடியாக நடித்த 'ஆண் தேவதை' திரைப்படம் மீண்டும் இவரை திரையுலகில் பின் தங்க வைத்தது.
ஆனால் ரம்யா பாண்டியன் அதிரடியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர், அட ரம்யா இவ்வளவு நல்லா சமயப்பங்களா? என்று அனைவருமே ஆச்சர்யப்படும் அளவிற்கு சமையலில் அசத்தினார்.
தமிழ் மொழியில் சில படங்களில் நடித்து வரும் ரம்யா, சமீபத்தில் நடிகர் மமூட்டிக்கு ஜோடியாக நண்பகல் நேரத்து மயக்கம் என்னும் படத்திலும் நடித்திருந்தார்.