இயக்குனர் விக்னேஷ் சிவன், நானும் ரெளடி தான் படத்தை இயக்கியபோது அவருக்கும் நடிகை நயன்தாராவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதையடுத்து 7 ஆண்டுகளாக உருகி உருகி காதலித்துவந்த இந்த ஜோடி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 9-ந் தேதி திருமணம் செய்துகொண்டனர். இவர்களது திருமணம் மகாபலிபுரத்தில் கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள பிரம்மாண்ட ஓட்டலில் நடைபெற்றது. இதில் ஏராளமான பிரபலங்களும் கலந்துகொண்டனர்.