காதலியை கரம்பிடித்தார் ரம்யா பாண்டியனின் சகோதரர் பரசு! வைரலாகும் போட்டோஸ்!

Published : Feb 01, 2025, 10:03 AM IST

ரம்யா பாண்டியனின் சகோதரர், பரசுவுக்கும் அவருடைய காதலிக்கும் பிரம்மாண்டமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது. தற்போது இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.  

PREV
18
காதலியை கரம்பிடித்தார் ரம்யா பாண்டியனின் சகோதரர் பரசு! வைரலாகும் போட்டோஸ்!
ரம்யா பாண்டியன்:

தமிழ் சினிமாவில் கதாநாயகியாக ஜெயிக்க முடியவில்லை என்றாலும், அதிகம் கவனம் பெற்ற நடிகையாக இருப்பவர் ரம்யா பாண்டியன். மறைந்த இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் துரைப்பாண்டியனின் மகளும், பிரபல தயாரிப்பாளர் அருண்பாண்டியனின் அண்ணன் மகளுமான ரம்யா பாண்டியன் சினிமா பின்னணி சேர்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், சிறு வயதில் இருந்தே நடிகையாக வேண்டும் என்கிற ஆசை இவருக்குள் இருந்தது.

28
ரம்யா பாண்டியனின் முதல் படம்:

படிப்பில் படுசுட்டி என்றாலும், நடிப்பிலும் ஆர்வம் காட்ட துவங்கினார். கல்லூரியில் படிக்கும் போதே நண்பர்கள் எடுத்த பல குறும்படங்களில் நடித்து, தன்னை ஒரு நடிகையாக மாற்றிக் கொள்ள தயாரான ரம்யா பாண்டியன்... டம்மி டப்பாசு என்கிற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக மாறினார். இதைத்தொடர்ந்து இவர் நடித்த 'ஜோக்கர்' திரைப்படம் இவருக்கு சிறந்த அறிமுகத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.

நிறைமாத நிலவாக சீரியல் நடிகை ஸ்ரித்திகா - கர்ப்பத்தை அறிவித்த நடிகர் SSR ஆரியன்!

38
ரம்யா பாண்டியனின் மொட்டை மாடி போட்டோ ஷூட்

இந்த படத்திற்கு பின்னர் இவர் நடித்த படங்கள், விமர்சன ரீதியாக வெற்றி பெற்றாலும்... வசூல் ரீதியாக பெரிதாக எந்த ஒரு வெற்றியையும் பெறவில்லை. எனவே தன் மீது கவனத்தை திறப்பும் விதமாக மொட்டை மாடியில், இடையழகை காட்டி இவர் எடுத்து வெளியிட்ட ஹாட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் ஒரே நாளில் பட்டி தொட்டி எங்கும் வைரலானது.

48
குக் வித் கோமாளி' சீசன் 2

இதைத்தொடர்ந்து இவருக்கு சினிமா வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஏமாற்றமே மிஞ்சியது. எனவே யாரும் எதிர்பாராத விதமாக சின்னத்திரையில் தன்னுடைய கவனத்தை திருப்பினார் ரம்யா பாண்டியன். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான 'குக் வித் கோமாளி' சீசன் 2'  நிகழ்ச்சியில் தன்னுடைய சமையல் திறமையை வெளிப்படுத்தினார். இந்த நிகழ்ச்சி அவருக்கு மேலும் பிரபலத்தை கொடுத்தாலும், பட வாய்ப்பை பெற்றுத்தரவில்லை.

ஆசை நிறைவேறிடுச்சு; குட்நியூஸ் சொன்ன அனிதா சம்பத் - குவியும் வாழ்த்துக்கள்!

58
விஜய் டிவி கொடுத்த பிக்பாஸ் வாய்ப்பு

எனவே மீண்டும் விஜய் டிவி கொடுத்த பிக்பாஸ் வாய்ப்பை ஏற்று கொண்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியில்,  மிகவும் திறமையாக விளையாடி பைனல் வரை வந்தார். இவருக்கு டைட்டில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரண்டாவது ரன்னர்ரப்பாக மாறினார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னரும் வாய்ப்புக்காக காத்திருந்த ரம்யா பாண்டியனுக்கு, சில படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும், அந்த படங்கள் இவருக்கு வெற்றியை கொடுக்க தவறி விட்டது.

68
ஆன்மீக சுற்றுலாவின் போது காதல்:

ஆன்மீக சுற்றுலா மீது இவர் ஆர்வம் காட்டிய போது தான், லவ்வல் தவான் என்பவரை சந்திக்க நேர்ந்தது. அதாவது ரம்யா பாண்டியன் சில மாதங்கள் யோகா பயிற்சி மேற்கொண்டு வந்தார். அப்போது ரம்யா பாண்டியனுக்கு பயிற்சி கொடுத்தவர்தான் இந்த லவ்வல் தவான். ரம்யா பாண்டியனுக்கு லவ்வல் தவானை மிகவும் பிடித்தால் இவரை வெளிப்படையாக தன்னுடைய காதலை கூறியுள்ளார். ஆரம்பத்தில் ரம்யாவின் காதலை இவர் ஏற்றுக்கொள்ள மறுத்தாலும்,  பின்னர் ஏற்றுக்கொண்டார்.

அதிதி நடிப்பதற்கு ஷங்கர் போட்ட கண்டீஷன் என்ன தெரியுமா?

78
ரம்யா பாண்டியனுக்கு நடந்த திருமணம்

 இதைத் தொடர்ந்து இவர்கள் இருவருக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரிஷிகேஷில் உள்ள கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள கோவிலில் எளிமையாக திருமணம் நடந்து முடிந்தது. சென்னையில் reception பிரம்மாண்டமாக நடந்தது.  ரம்யா பாண்டியனுக்கு திருமணம் ஆகி மூன்று மாதமே ஆகும் நிலையில். தற்போது இவருடைய சகோதரர் பரசு பாண்டியனுக்கும் திருமண ஏற்பாடுகள் நடந்து வந்தன. கடந்த சில தினங்களுக்கு முன்பு பந்தக்கால் நட்டு, நலங்கு வாய்த்த புகைப்படங்களை ரம்யா பாண்டியன் வெளியிட்டு  இந்த தகவலை உறுதி செய்தார்.

88
ரம்யா பாண்டியன் தம்பி பரசுவுக்கு திருமணம் முடிந்தது:

தற்போது பரசு பாண்டியனுக்கும், அவருடைய காதலிக்கும் திருமணம் நடந்து முடிந்துள்ளது. இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன, பரசு பாண்டியன் சிங்கப்பூரில் டிசைனராக பணியாற்றி வந்த நிலையில், தற்போது சென்னையில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த திருமணத்தில் அருண்பாண்டியனின் குடும்பம் மற்றும் குடும்பத்தினர் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி உள்ளனர். பரசு பாண்டியனின் திருமணத்திற்கு நெட்டிசன்கள் மற்றும் ரம்யாவின் ரசிகர்கள் பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தமன்னா - விஜய் வர்மா பிரேக்கப்பா? ரகசிய பதிவால் பரபரப்பு!

click me!

Recommended Stories