Published : Feb 01, 2025, 09:05 AM ISTUpdated : Feb 01, 2025, 05:52 PM IST
சீரியல் நடிகை ஸ்ரித்திகா மற்றும் எஸ் எஸ் ஆர் ஆரியன் கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் தகவலை அறிவித்துள்ளனர்.
மலேசியாவைச் சேர்ந்த ஸ்ரித்திகா மாடலிங் துறையில் கால் பதித்த பின்னர், திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி வந்தார். அந்த சமயத்தில் கதாநாயகி கதாபாத்திரம் கிடைக்கவில்லை என்றாலும், 'மகேஷ் சரண்யா மற்றும் பலர்' திரைப்படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதில் நடிகர் சக்திக்கு தங்கையாக நடித்திருந்தார் ஸ்ரித்திகா. இதைத் தொடர்ந்து தன்னைத் தேடி வந்த சீரியல் வாய்ப்புகளை ஏற்று கொண்டு நடிக்க துவங்கினார்.
26
நாதஸ்வரம் சீரியல்:
சன் டிவியில் இவர் நடித்த 'கலசம்' சீரியல் நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து, அவ்வப்போது சில திரைப்படங்களிலும் தலை காட்டினார். முழு நேர சீரியல் நடிகையாக ஸ்ரித்திகாவுக்கு, மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியது திருமுருகன் இயக்கி நடித்த நாதஸ்வரம் சீரியல். 2010 முதல் 2015 ஆம் ஆண்டு வரை இந்த சீரியல் ஒளிபரப்பானது. இதைத்தொடர்ந்து மாமியார் தேவை,உறவுகள் சங்கமம், வைதேகி, உரிமை, குலதெய்வம், என் இனிய தோழி, கல்யாண பரிசு, உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட சீரியல்-களில் நடித்தார்.
36
முதல் திருமணத்தில் விவாகரத்து:
முன்னணி சீரியல் நடிகையாக இருக்கும் போதே, சனீஸ் என்பவரை 2020-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்திய ஸ்ரித்திகாவுக்கும் அவருடைய கணவருக்கும் தொடர்ந்து கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு வந்த நிலையில், இருவரும் இரண்டே வருடத்தில் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
46
ஆரியனுக்கும் ஸ்ரித்திகாவுக்கும் ஏற்பட்ட காதல்
விவாகரத்துக்கு பின்னர் மீண்டும் தொலைக்காட்சி தொடர்களில் முழு கவனம் செலுத்திய ஸ்ரித்திகா எஸ் எஸ் ஆர் ஆரியன் ஹீரோவாக நடித்த மகராசி தொடரில் கதாநாயகியாக நடித்தார். இந்த தொடரில் இருவரும் ஒன்றாக நடித்துக் கொண்டிருக்கும் போது, ஆரியனுக்கும் ஸ்ரித்திகாவுக்கும் ஏற்பட்ட நட்பு காதலாக மாறியது. ஆரியனும் ஏற்கனவே நடிகை நடிகை நிவேதிகா பங்கஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தவர் என்பதால் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.
56
ஆரியனை கரம் பிடித்த ஸ்ரித்திகா
அதன்படி கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஸ்ரித்திகா மற்றும் ஆரியன் திருமணம், ரிஜிஸ்டர் ஆபிசில் மிகவும் எளிமையாக நடந்த நிலையில், ரிசப்ஷன் பிரமாண்டமாக நடந்தது. இதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.தற்போது ஸ்ரித்திகா - ஆரியன் தம்பதி பெற்றோர் ஆக உள்ள தகவலை தங்களுடைய சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளனர்.
66
கர்ப்பத்தை அறிவித்த சீரியல் ஜோடி
இதுகுறித்து அவர்கள் போட்டுள்ள பதிவில், மிகுந்த சக்தியுடன் பெரும் பொறுப்பும் வருகிறது! எங்கள் பயணம் எங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் மிகுந்த அன்பு மற்றும் ஆதரவுடன் தொடர்கிறது, எனவே இப்போது நாங்கள் பெற்றோராக எங்கள் வாழ்க்கையின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பகுதிக்குள் அடியெடுத்து வைக்கிறோம். மிகுந்த மகிழ்ச்சியுடன் நாங்கள் சர்வவல்லமையுள்ளவரின் அனைத்து ஆசீர்வாதங்களாலும் கர்ப்பமாக இருக்கிறோம் என்பதை உலகிற்கு அறிவிக்கிறோம்! மேலும் பதிவுகள் மற்றும் புதுப்பிப்புகளுக்கு காத்திருங்கள், எங்களைப் பின்தொடர மறக்காதீர்கள், ஏனெனில் எங்கள் சமூக ஊடகக் குடும்பத்திலிருந்து நிபந்தனையற்ற அன்பையும் ஆதரவையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம், என தெரிவித்துள்ளனர். இதை தொடர்ந்து ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை இவர்களுக்கு தெரிவித்து வருகிறார்கள்.