தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக உள்ள விஜய், அஜித், ரஜினிகாந்த, கமல்ஹாசன் போன்ற டாப் நடிகர்கள் குழந்தையாக இருக்கும் போது இப்படித்தான் இருந்திருப்பார்களோ... என அனைவரையும் ஆச்சர்யாடுத்தும் அளவிற்கு, டிஜிட்டல் பெயின்டிங் செய்து அசத்தியுள்ளார் ஜியோ ஜான் முள்ளூர் என்பவர். ஜியோ ஜான் முள்ளூர் நடிகர்களின் குழந்தைகள் சீரிஸ் புகைப்படங்களை அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட, அவை வைரலாக பார்க்கப்பட்டு, ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.
செம்ம கியூட்டாக இருக்கும் இந்த குழந்தை, வேறு யாரும் இல்லை... அர்ஜுன் ரெட்டி படம் மூலம் ரசிகர்கள் மனதில் அழுத்தமாக தன்னுடைய வெற்றியை பதிவு செய்த நடிகர் விஜய் தேவரைக்கொண்டா தான்.
210
Instagram/ Photos Credited by jyo_john_mulloor
இந்த புகைப்படத்தில் இருப்பது தமிழ் சினிமாவில், தொடர்ந்து தரமான புகைப்படங்கள் மூலமாக, நடிகராக மட்டும் இன்றி, தயாரிப்பாளராகவும் தன்னை நிலை நிறுத்திக்கொண்டுள்ள சூர்யா தான்.
தளபதி விஜய்யின் குழந்தை வயது புகைப்படங்கள் சில வெளியாகி இருந்தாலும், 3 முதல் 4 வயதில் தளபதி எப்படி இருந்திருப்பார் என பலரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. அப்படி பட்டவர்கள் இந்த புகைப்படத்தை பார்த்து ஆறுதல் படுத்தி கொள்ளலாம்.
410
Instagram/ Photos Credited by jyo_john_mulloor
உண்மையில் நடிகர் விக்ரம் இப்படி தான் இருந்திருப்பாரோ? என அனைவரையுமே சிந்திக்க வைத்துள்ளது இந்த புகைப்படம்...
தல அஜிதை, இந்த டிஜிட்டல் சைல்டு வுட் வெர்ஷன் புகைப்படத்தில் பார்ப்பதற்கு... அப்படியே அவருடைய மகன் ஆத்விக் போலவே இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.
610
Instagram/ Photos Credited by jyo_john_mulloor
தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் என படு பிசியாக திரையுலகில் நடித்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் சேதுபதியின் வேற லெவல் சைல்டு வுட் வெர்ஷன் புகைப்படம் இது.
பழம்பெரும் நடிகர் சிவகுமாரின் இரண்டாவது மகனும், நடிகர் சூர்யாவின் சகோதரருமான கார்த்தியின் டிஜிட்டல் பைண்டிங் தான் இது. சூர்யாவை விட கார்த்தி செம்ம கியூட்டாக இருக்காரே...
810
Instagram/ Photos Credited by jyo_john_mulloor
நடிகர் கமல்ஹாசன் சிறு வயது புகைப்படத்துடன் இது சற்று பொருந்த வில்லை என்றாலும்... டிஜிட்டல் பெயிண்ட்டிங் மூலம்... நடிகர்களின் அரிய குழந்தை புகைப்படங்களை கண் முன் காட்டியதற்கு எடுத்த முயற்சிகள் பாராட்டக்குறியவையே...
நடிகராவதற்கு தோற்றம் முக்கியம் அல்ல... திறமை இருந்தால் போதும் என தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் நிரூபித்து வரும், நடிகர் தனுஷின் சிறு வயது தோற்றம் இது
1010
Instagram/ Photos Credited by jyo_john_mulloor
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்... குழந்தையில் கூட இவ்வளவு ஸ்டைலிஷ் ஹேர் ஸ்டைலில் பார்ப்பது ஆச்சர்யம் தான். எனினும் ரஜினி ரசிகிர் இந்த புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்கள்.