காதல் கொண்டேன் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமான, நடிகை சோனியா அகர்வால், அந்த படத்தின் இயக்குனரும், பிரபல இயக்குனருமான செல்வராகவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்களின் திருமண வாழ்க்கை நீடிக்கவில்லை. கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இதை தொடர்ந்து வெள்ளித்திரை வாய்ப்புகள் கிடைக்காததால், சின்னத்திரை சீரியல்களில் கவனம் செலுத்தி வந்த சோனியா அகர்வால் தற்போது மீண்டும் திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.