அஜித் தற்போது இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடித்துள்ள 'துணிவு' திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 11ஆம் தேதி வெளியாக உள்ளது. எனவே அஜித் அடுத்ததாக நடிக்க உள்ள படம் குறித்த தகவலும், இதில் நடிக்க உள்ள நடிகர், நடிகைகள், குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.
எனவே இயக்குனர் விக்னேஷ் சிவன், இந்த படத்தில் நடிக்க உள்ள நடிகர் - நடிகைகள் குறித்த தேர்வில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அவ்வபோது ஏகே 62 படத்தில் நடிக்க உள்ள, பிரபலங்கள் குறித்த லேட்டஸ்ட் தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.
'தனி ஒருவன்' படத்தின் மூலம் தன்னை ஒரு ஸ்டைலிஷ் வில்லனாக வெளிக்காட்டிக்கொண்ட, பிரபல நடிகர் அரவிந்த்சாமி அஜித்துக்கு வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதே போல் ஏற்கனவே இந்த படத்தில், பிரபல நடிகை திரிஷா அஜித்துக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியான நிலையில்,தற்போது காஜல் அகர்வால் நடிக்க கூடும் என சினிமா வட்டாரத்தில் செய்திகள் கசிந்துள்ளது.